16
Dec
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, இசை சென்சேஷன் சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிளாப் போர்ட் ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த 6 வருடமாக, 4 படங்களில் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறேன். அவர் ஒரு இயக்குனர்களின் நடிகர், தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுபவர். ஒரு இயக்குனர் தான் நினைத்த விஷயங்களை மிகச்சரியாக திரையில் கொண்டு வருவது ஒரு சிறந்த ஆளுமை. கார்த்தியை பற்றி நான் நினைத்ததை சரி என திரையில் நிரூபித்திருக்கிறார் என்றார் நடிகர் பொன்வண்ணன். இயக்குனர் கார்த்திக் எனக்கு 10 வருடமாக பழக்கம். சரண், அமீர், மிஷ்கின் ஆகியோரிடம் பணி புரிந்தவர். இதிலேயே அவர்…