புதிய தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா கலைக்க வேண்டும்!

புதிய தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா கலைக்க வேண்டும்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய தயார் தயாரிப்பாளர்கள் கூட்டாக பேட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் : பாரதிராஜாவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கம் என்பது தாய் வீட்டை பிரிக்கும் செயல். 4 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் 1500க்கும் மேற்பட்டோருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்நிலையில் ஒருசிலர் சுயநலத்திற்காக நமது சங்கம் பிளவு படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.. தயாரிப்பாளர் வி.சேகர் புதிய சங்கத்தை உருவாக்க நிச்சயம் ஒரு காரணம் அவசியம் வேண்டும், ஆனால் தற்போது தமிழ் சினிமா ஸ்தம்பித்து உள்ள நிலையில் புதிய சங்கம் துவங்குவது, தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும். எனவே பாரதிராஜா புதிய சங்கம் துவங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.…
Read More
‘குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!

‘குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!

சினிமா கனவில் இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கிறார்கள். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்து விடுகிறது .அப்படிப்பட்ட வகையில் உருவாகி வரும் படம்தான் ‘குடிமகன்’ இதை விஜய் ஆதித்யன் இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படத்தை ஓன் ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இக் குறும்படத்தைப் பார்த்து விட்டு திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர். பாடலாசிரியர் விவேக் 20 நிமிட குறும்படத்தை பார்த்து விட்டு 20 நிமிடங்கள் பேசி வாழ்த்தியிருக்கிறார் .படத்தின் வசனங்களை எல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டி ஊக்கப்படுத்தி இருக்கிறார் . நடிகர் டேனியல் பாலாஜி முதலில் யார் நீங்கள் ? என்று கேட்டிருக்கிறார் . பிறகு,”கண்டிப்பாக இந்த நல்ல முயற்சிக்கு உதவி செய்வேன் நல்லா இருக்கிறது படம்.” என்று கூறியிருக்கிறார் . விஜய்மில்டனிடம் படத்தைப் பார்க்கச் சொன்னபோது , “நான் விளம்பரப்படுத்தியெல்லாம் பேச மாட்டேன். ஆனால் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஏதாவது உதவி செய்கிறேன். என்றவர்,…
Read More
பாரதிராஜா தலைமையில் புது புரொடியூசர்கள் சங்கம்!

பாரதிராஜா தலைமையில் புது புரொடியூசர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் பிலிம்சேம்பரில் உள்ளது. அதனை அரசு நியமித்துள்ள தனி அதிகாரி நிர்வகித்து வருகிறார். சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் டைரக்டர் பாரதிராஜா தலைமையில் 'தமிழ்த் திரைப்பட நட்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் இன்று புது சங்கம் தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சங்கத்தின் அவசியம் பற்றி பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமா கிறது. தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையு வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும். தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவ தில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப் படுத்தாதால், அவ்வலியை நாம்…
Read More
நிஜமான வெற்றிப் படங்களை  தரும் ஆக்டர்”வெற்றி”!

நிஜமான வெற்றிப் படங்களை தரும் ஆக்டர்”வெற்றி”!

ஒரு நடிகர் தான் நடித்த இரண்டே படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பது அரிதான விஷயம். அந்த அரிதான விஷயத்தை செய்துள்ளவர் தான் நடிகர் வெற்றி. இவர் ஹீரோவாக நடித்த எட்டு தோட்டாக்கள், ஜீவி ஆகிய இரண்டு படங்களும் அவருடைய சிறப்பான நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது. இந்நிலையில் வனம், கேர் ஆஃப் காதல், மெமரிஸ் போன்ற அவருடைய அடுத்த படங்கள் முந்தைய இரண்டு படங்களைப் போலவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து நல்ல நல்ல கதைக்களம் உள்ள படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார் நடிகர் வெற்றி.
Read More
நிதின் சத்யா தயாரிச்ச ‘லாக்கப்’ கூட OTT ரிலீஸாம்!

நிதின் சத்யா தயாரிச்ச ‘லாக்கப்’ கூட OTT ரிலீஸாம்!

நடிகர் நித்தின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான ‘ஷ்வேத் - எ  நித்தின்  சத்யா  புரொட்கஷன்  ஹவுஸ்’  சார்பாக  சென்ற  வருடம்  ஜெய்  நடிப்பில்  உருவான  ‘ஜருகண்டி’  படத்தை  தயாரித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து  தற்போது  அவர்  பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கும்  இரண்டாவது திரைப்படம்  ‘லாக்கப்.’  முழுக்க,  முழுக்க  இன்வெஸ்டிகேடிவ்  திரில்லராக  உருவாகும்  இப்படத்தில்  வைபவ்  கதாநாயகனாகவும்  வாணி  போஜன்  கதாநாயகியாகவும்  நடிக்க,  பிரபல  இயக்குநரும்,  நடிகருமான  வெங்கட் பிரபு  முற்றிலும்  மாறுபட்ட  முக்கிய  கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.  மேலும்  ஈஸ்வரி  ராவ்,   பூர்ணா  ஆகியோர்  முக்கிய  கதாபாத்திரங்களில்  நடிக்க  உடன்  பல  நடிகர், நடிகையர்கள்  நடித்துள்ளனர். இந்தப் படத்தை  புதுமுக  இயக்குநரான  S.G.சார்லஸ்  இயக்கியுள்ளார். இவர் இயக்குநர்  மோகன் ராஜாவிடம்  பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான  ‘லாக்கப்’  படத்தின்  முதல்  பார்வை  போஸ்டர்  அனைவரின்  கவனத்தையும் ஈர்த்துள்ளது.  தற்போது இத்திரைப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 OTT தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது. மிகப் பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த,…
Read More
பாடகி வைக்கம் விஜய லட்சுமி  ‘கால் டாக்ஸி’ படத்திற்காகப் பாடிய பாடல்!

பாடகி வைக்கம் விஜய லட்சுமி ‘கால் டாக்ஸி’ படத்திற்காகப் பாடிய பாடல்!

கே.டி.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கபிலா தயாரித்துள்ள திரைப்படம் ‘கால் டாக்ஸி’. இந்தப் படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘மெர்லின்’, ‘மரகத காடு’, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’, ‘ஜீவி’, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதன்பாப், இயக்குநர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், ‘பசங்க’ சிவகுமார், ‘கான மஞ்சரி’ சம்பத்குமார், முத்துராமன், ‘பெல்லி’ முரளி, சந்திரமௌலி, ‘போராளி’ திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். சண்டை காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், படத் தொகுப்பை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். தமிழகத்தில் கால் டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக இந்த ‘கால் டாக்ஸி’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. பிரபல பின்னணி…
Read More
வரலட்சுமி நடித்துள்ள ‘டேனி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

வரலட்சுமி நடித்துள்ள ‘டேனி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

பி.ஜி.மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஜி.முத்தையாவும், தீபாவும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'டேனி'. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், வேல.ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கொரோனா தாக்குதலுக்கு முன்பாகவே திரைக்கு வரத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலால் திரையரங்குகள் மூடப்பட்டதால் புதிய முயற்சியாக ஓ.டி.டி. என்னும் இணையத் தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 'ZEE-5' என்னும் ஓ.டி.டி. தளத்தில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியன்று இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படம் பற்றி தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா பேசும்போது, "தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்திதான் இந்தக் கதை நடக்கிறது. அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் ‘பிங்கி’ என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது.…
Read More
அருள்தேவ் மியூசிக்’கில் உருவான ’மிருகா’ சிங்கிள் ரிலீஸாகப் போகுது!

அருள்தேவ் மியூசிக்’கில் உருவான ’மிருகா’ சிங்கிள் ரிலீஸாகப் போகுது!

அருள் தேவ் தாத்தா சந்தானம் ஆர்மோனியம் பிளேயர். அருள்தேவ் அப்பா அக்கார்டின் சுவாமிநாதன். இவர் ஒய்ஃப்பின் தாத்தா தன்ராஜ் மாஸ்டர். அவர்கிட்டதான் ஏ.ஆர்.ரஹ்மான்ல இருந்து விஜய் வரை பல பிரபலங்கள் இசை கத்துக்கிட்டாங்க. இந்த அருள்தேவ் குறித்து சுருக்கமான அறிமுகம் வேண்டுமென்றால் பாகுபலி-2, நடிகையர் திலகம் போன்ற ஆல் இந்தியா ஹிட்ப் படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை மிரட்டியவை, மனதை மயக்கியவை. அத்தகைய இசையில் இந்த சென்னைக் காரரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக்கும். தமிழில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த ‘போட்டா போட்டி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இவர். ‘‘பூர்வீகம் மதுரை..அப்புறம் ‘பூவரசம் பீப்பீ’, ‘கத்துக்குட்டி’ ‘மோகினி’ படங்கள்ல இவரின் இசை கவனிக்கப்பட்டது. தெலுங்கில் நேஷனல் அவார்டு வாங்கின ‘சதமானம் பவதி’யில ஒர்க் பண்ணியிருக்கிறார். இப்படியாப்பட்டவர் இசையில் உருவாக்கி இருக்கும் படம்தான் ‘மிருகா’. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது,…
Read More
கே.பி.90-மரம் நடும் சபதம்!

கே.பி.90-மரம் நடும் சபதம்!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதாக சபதம் எடுத்துள்ளனர் அவருடைய ரசிகர்கள். இயக்குநர் சிகரம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு,90 மரக் கன்றுகளை நடுவதற்கு, இயக்குநர் சிகரம் அவர்களின் புதல்வி புஷ்பா கந்தசாமி, மருமகன் .கந்தசாமி ஆகியோர் முதல் இரு மரக்கன்றுகளையும், நன்கொடையாக பத்தாயிரம்(10,000/-)ரூபாயும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களிடம் கொடுத்தார்கள். இதை தொடர்ந்து கலைமாமணி நடிகை குமாரி சச்சு, நடிகை .ரேணுகாகுமரன், நடிகர்கள் .ராஜேஷ், .பூவிலங்குமோகன், .ரகுமான், .ராம்ஜி, .குமரன், நடிகரும் கராத்தே மாஸ்டருமான .சிஹான் உசேன் HU, இயக்குநர் நடிகர் தயாரிப்பாளருமான .T.P.கஜேந்திரன், நடிகரும் இயக்குநருமான ரமேஷ்கண்ணா, கவிஞர் இயக்குநர் கண்மணி சுப்பு, இயக்குநர் நாகா, தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி, பொதுச் செயலாளர் .C.ரெங்கநாதன், இணைச் செயலாளர் T.R.விஐயன், கே.பி. வண்டி ஓட்டுனர், கோவிந்தசாமி, ராஜேந்திரன் ஆகியோர்,முதல் பகுதியாக கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளிடம்…
Read More
20 விருதுகளைக் குவித்த குறும்படம்..!!

20 விருதுகளைக் குவித்த குறும்படம்..!!

நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி , கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ‘ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். “ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக் கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி என்பது பற்றியெல்லாம் ஆளுக்கொரு ஒரு விளக்கம் கூறுவார்கள். ஆனால் ”எது தேவையோ அதுவே தர்மம்” என்பது தான் நடைமுறையில் அனைவராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஓர் உண்மையாக இருக்கும். அதுபோல் சமகால மக்களின் வாழ்வியல் பிரச்சினையில் உள்ள நியாய தர்மத்தின் அடிப்படையை மையமாக வைத்து உருவாகும் படங்கள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை கண்டிப்பாக பெரும். அந்த வகையில் சமகால கடைநிலை மக்களின் வாழ்வியலை அதன் தன்மை மாறாமல் அப்படியே…
Read More