“‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்! .

“‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்! .

ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ , கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாயகன் துல்கர் சல்மான், “இப்போது இதுவரைக்கும் நீங்கள் பார்த்தது வெறும் டீசர் தான். படம் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும். உலகத்தின் பல பகுதிகளில் ஒரே நாளில் வெளியாகும் என் முதல் படம். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படத்தை எடுத்தது சாதாரண விஷயம் கிடையாது. ஒரே காட்சியை திரும்ப திரும்ப இரு மொழிகளிலும் எடுத்தது சவாலாக இருந்தது. தமிழ்,…
Read More
இங்கிலீஷ் பட சர்ச்சை – நடிகர் ஆரி விளக்கம்!

இங்கிலீஷ் பட சர்ச்சை – நடிகர் ஆரி விளக்கம்!

'இங்கிலிஷ் படம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் மீது நடிகர் ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து ‘நான் இங்கிலிஷ் படம் இயக்குநர் குறித்து எந்த விதமான புகாரும் அளிக்கவில்லை. என்னுடைய பெயரை சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்திவர்கள் மீதே புகார் அளித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். ஆர் .ஜே. மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இங்கிலிஷ் படம். புதுமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த  'இங்கிலிஷ் படம்' இயக்குநர் மீது ஆரி காவல்துறையில் புகார் அளித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது, அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த அவர், அது குறித்து தனது விளக்கத்தைக் கடிதமாக வெளியிட்டுள்ளார். "இங்கிலிஷ் படம்…
Read More
விஜய் சேதுபதி – கோகுல் நடத்தும் காந்தி ஜெயந்தி மேஜிக்!

விஜய் சேதுபதி – கோகுல் நடத்தும் காந்தி ஜெயந்தி மேஜிக்!

சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல்  இயக்கத்தில், இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’  ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்  கை கோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்துபேசப்பட்டு வருகிறது.  இப்போது இதே போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல்படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2)பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. ‘வனமகன்’ படத்தின் மூலம்ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகஅறிமுகமான சாயிஷா சாய்கல்‘ஜுங்கா’ படத்தின் நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜாலிபாடல்களையும், மெலடிமெட்டுக்களையும் ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்காகஉருவாக்கித் தந்த சித்தார்த் விபின்இப்படத்திற்கும்இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.  இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ளபடங்களிலேயேமிகப்பிரம்மாண்டமான படமாகஉருவாகவுள்ளது ‘ஜுங்கா’திரைப்படம். இப்படத்தைவிஜய்சேதுபதியே தன்னுடையசொந்த பேனரில் தயாரிப்பதால்,படம் மீதான ரசிகர்களின்எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்புதுவங்குவதற்கு முன்பே இப்படம்சம்பந்தப்பட்ட வியாபாரம்முடிந்துவிட்டது. படத்தின் பூஜைசமயத்திலேயே அப்படத்தின்வியாபாரங்கள் தொடங்குவதுஇதற்கு முன்பு சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமேநிகழ்ந்துள்ள அதிசயம்…
Read More
அரசியலை காமெடியாக சொல்ல வருது ‘அண்ணனுக்கு ஜே’

அரசியலை காமெடியாக சொல்ல வருது ‘அண்ணனுக்கு ஜே’

விசாரணை ' படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கிற படம் 'ஒரு நாள் கூத்து'. இப்படத்தை அடுத்து 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தில் நடிக்கிறார் 'அட்டகத்தி ' தினேஷ். வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். அட்டகத்தி’ தினேஷூடன் , மகிமா நம்பியார், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநராய் அறிமுகமாகிறார் ராஜ்குமார். ‘ஃபாக்ஸ் ஸ்டார்’ நிறுவனம் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் சில காரணங்களால் பணிகள் தொடங்குவதில் காலதாமதமானது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, ரஞ்சித் இயக்கிய கபாலி படங்களில் நடித்தார் தினேஷ். அந்த இரண்டு படங்களிலும் இவருடைய நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. கடந்த வருடம் (2016) தொடங்கப்பட்டு பிரேக்கான ‘அண்ணனுக்கு ஜே!’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அரசியலை விமர்சிக்கும் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள…
Read More
சிவாஜி மணி மண்டப விழாவில் ஓ பி எஸ் , ரஜினி, கமல் பேச்சு முழு விபரம்!

சிவாஜி மணி மண்டப விழாவில் ஓ பி எஸ் , ரஜினி, கமல் பேச்சு முழு விபரம்!

சிவாஜி மணிமண்டபத்தை திறந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, “புரட்சித்தலைவி அம்மா, சென்னை, அடையாறில் நடிகர் திலகத்துக்கு மணி மண்டபம் அமைக்க 2.80 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் உத்தரவிட்டார். அம்மாவின் ஆணைக்கிணங்க, மணிமண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்ததையடுத்து, நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் மணிமண்டபம் திறப்பு விழா நடத்தப்படுவது, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும் எனும் உயர்ந்த எண்ணத்தோடு, அவரது பிறந்த நாளான 01.10.2017 அன்று தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா நடத்திட முதல்- அமைச்சர் உத்தரவிட்டார். திரைப்பட உலகம் பெருமை கொள்ளும் வகையிலும், மேலும் வளர்ச்சி அடைய பல்வேறு சலுகைகளை அளித்து, தமிழ்த் திரைப்படத்தொழில் நிலைத்து நின்று எழுச்சி பெற வழிவகுத்தவர் புரட்சித் தலைவி அம்மா. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ரூ.10 கோடி மானியமாக வழங்கி இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை இந்தியாவிலேயே முதன் முதலாக,…
Read More
நடிகர் திலகம் சிவாஜிகணேசனிடம் செல்வி ஜெயலலிதா எடுத்த பேட்டி!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனிடம் செல்வி ஜெயலலிதா எடுத்த பேட்டி!

✍🏼ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா? 🎬சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன். ✍🏼ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா? 🎬சிவாஜி:அரசியல் வேறு,நடிப்பு வேறு.நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு.சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு.உதரணமா எனக்கு இரண்டுமாசம் ஓய்வு கிடைக்குதுன்னு…
Read More
மோகன் பாபு மகன் விஷ்ணு மஞ்சு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ குறள்  388’!

மோகன் பாபு மகன் விஷ்ணு மஞ்சு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ குறள் 388’!

தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். மோகன் பாபு இப்போதும் அதிகமாக நடிப்பதில்லை. எனினும் தெலுங்கு சினிமாவின் பவர் சென்டர்களில் அவரும் ஒருவர். அவரது மகள் மஞ்சு லக்ஷ்மி, மகன்கள் விஷ்ணு மஞ்சு, மஞ்சு மனோஜ் மூன்று பேரும் திரைப்படத்துறை யில் தான் இருக்கின்றனர். மஞ்சு லக்ஷ்மி மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்திருந்தார். மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல்வேறு படங்களில் நடிகராக நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை.தற்போது கார்த்திக் இயக்கியுள்ள புதிய படத்தின் மூலம், தமிழிலும் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் விஷ்ணு மஞ்சு. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. சுரபி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஹைதராபாத், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.'குறள் 388'…
Read More
யோவ். டி..ஆரூ? நீ யாருய்யா அந்த பொண்ணை  அவமரியாதை செய்ய?  விஷால் கோபம்!

யோவ். டி..ஆரூ? நீ யாருய்யா அந்த பொண்ணை அவமரியாதை செய்ய? விஷால் கோபம்!

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே... நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி…
Read More
தனுஷ் ஜோடி ஆகிறார் மலர் டீச்ச்சர் ‘ சாய் பல்லவி’

தனுஷ் ஜோடி ஆகிறார் மலர் டீச்ச்சர் ‘ சாய் பல்லவி’

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மாரி 2’ படத்தில், தமிழ், மலையாளம் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலர் டீச்சர் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி'. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சாய் பல்லவி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தேர்வு செய்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. இதில் இடம்பெற்ற மலர் டீச்சர் கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மலர் டீச்சர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சாய்பல்லவிதான். அந்தளவிற்கு ரசிகர்கள்…
Read More
சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் என்றும், இந்த விஷயத்தில் சாதகமான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார். இது தொடர்பாக சிவாஜி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவர் மாநில தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- அப்பாவின் (சிவாஜி) நினைவு மண்டபம் என்பது மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதாவின் மிகப் பெரிய கனவு திட்டமாகும். அவர் உயிரோடு இருந்திருந்தால் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து  சகாப்தம் படைத்த எங்களது தந்தை நடிகர் திலகத்தின் ஆன்மாவுக்கு திருப்தி அளித்திருப்பார். நாங்களும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் மிகப்பெரிய நடிகரின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் அவர் மிகப்…
Read More
error: Content is protected !!