ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம்  ‘தென்னாட்டான் ‘ !

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் ‘தென்னாட்டான் ‘ !

ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படமான  'தென்னாட்டான் ' படத்துக்கு  நேற்று பூஜை போடப்பட்டது. தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். கை நிறைய படங்களுடன் ஓய்வின்றி நடித்து வரும் அவரது அடுத்த படமான 'தென்னாட்டான் 'படத்துக்கு  நேற்று பூஜை போடப்பட்டது. இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.  படத்தைப்  புதுமுக இயக்குநர்  எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார். ' தென்னாட்டான்  ' பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பைப்  தொடங்குகிறார்கள்.
Read More
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம்” கெளதமி புத்ர சாதகர்ணி”

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம்” கெளதமி புத்ர சாதகர்ணி”

எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம்..அதற்கு உதாரணம் பாகுபலி 1பாகுபலி 2 படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் “ கெளதமி புத்ர சாதகர்ணி “ ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.பாலகிருஷ்னாவின் 100 வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது. ஒளிப்பதிவு : சரஸ்வதி புத்ர ஞானசேகர் இசை : பாரதி புத்ர சிரஞ்சன் நடனம் : பாரதி புத்ரி…
Read More
ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் =  ‘ மரகத நாணயம்’

ஆரம்பச்சதிலிருந்து முடியும் வரை காமெடிதான் = ‘ மரகத நாணயம்’

ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. டில்லி பாபு தயாரிக்க சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் ‘மரகத நாணயம்’ படம் ஜுன் 16ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.நகைச்சுவை, த்ரில்லர், ஃபேன்டஸி கலந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சரவன் தான் இயக்கியுள்ள முதல் படத்திலேயே படத் தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமையான  ஜுன் 16ம் தேதி ஐந்து படங்கள் வெளிவந்தாலும் ‘மரகத நாணயம்’ படம் மட்டும்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளார்கள் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு. முன்னதாக இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, "1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டத்தில் இக்கதை நடைபெறும்.…
Read More
விஜய்சேதுபதி  –   திரிஷா  நடிக்கும் ‘96′ பட ஷூட்  இன்று தொடங்கியது!

விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘96′ பட ஷூட் இன்று தொடங்கியது!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம் இசை - கோவிந்த் மேனன் எடிட்டிங் - கோவிந்தராஜ் கலை - வினோத் ராஜ்குமார் பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா. எழுத்து, இயக்கம் - C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தயாரிப்பு - எஸ்.நந்தகோபால் இந்த படத்தின் துவக்க விழா ஜுன் 12 ( இன்று ) சென்னையில் நடைபெற்றது விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர்…
Read More
பணத்தின் மதிப்பைச் சொல்ல வரும் ’ ரூபாய்’

பணத்தின் மதிப்பைச் சொல்ல வரும் ’ ரூபாய்’

காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “ சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமா னவர்கள். மற்றும் கிஷோர்ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு - V.இளையராஜா / இசை - D.இமான் / பாடல்கள் - யுகபாரதி எடிட்டிங் - R.நிர்மல் / கலை - ஏ.பழனிவேல் / நடனம் - நோபல் ஸ்டன்ட் - மிராக்கிள் மைக்கேல் / நிர்வாக தயாரிப்பு - ஜே.பிரபாகர் இணை தயாரிப்பு - ஆர்.ரவிச்சந்திரன் தயாரிப்பு - பிரபுசாலமன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.அன்பழகன். இந்தப் படம் சென்ற ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்தியேகமாக ரிலீசுக்கு முன்னரே திரையிடப்பட்டது. அப்போது இப்படத்தைக் கண்டவர்கள், பணத்தின்…
Read More
திரெளபதி அம்மன் சிலையை சுமந்த உதயநிதி ஸ்டாலின்..!

திரெளபதி அம்மன் சிலையை சுமந்த உதயநிதி ஸ்டாலின்..!

தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’.இந்தப் படத்தில் வித்தியாச இயக்குநரான ஆர்.பார்த்திபன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘டைகர் பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் மயில்சாமி, ‘நமோ’ நாராயணன், சுந்தர், ரமா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், இசை – டி.இமான், பாடல்கள் – யுகபாரதி, கலை – வி.செல்வக்குமார், படத் தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ், சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, நடனம் – பிருந்தா, தினேஷ், ஷோபி, தயாரிப்பு நிறுவனம் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட்,  தயாரிப்பாளர் – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – தளபதி பிரபு. அறிமுக இயக்குநரான தளபதி பிரபு, இயக்குநர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இன்றைய இளைய தலைமுறையினர் வசதியான…
Read More
கமலின்  ஆளவந்தான் அப்டேட்டா டிஜிட்டலில் ரெடியாகுது!

கமலின் ஆளவந்தான் அப்டேட்டா டிஜிட்டலில் ரெடியாகுது!

கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த 'ஆளவந்தான்' திரைப்படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தாலும் கதைசொல்லல் முறை மற்றும் உருவாக்கத்தில் சிறந்த படமாக இப்போதும் பேசப்பட்டுவருகிறது. உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநரான குவாண்டின் டொரண்டினோ ஒரு முறை ‘ஆளவந்தான் படத்தில் வரும் காமிக் சண்டைக்காட்சியின் பாதிப்பிலிருந்து தான் தனது Kill Bill படத்தின் உருவாக்கத்தை அமைத்தேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அண்ணன், தம்பி என இரு வேடங்களில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ரவீனா தண்டன் உள்படப் பலர் நடித்த இந்தப் படத்தைச் சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலேயே ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் பட்ஜெட் இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'ஆளவந்தான்' திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கக் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளார். இந்தத் தலைமுறையினர் தவறவிட்ட ஆளவந்தான் படத்தை மிக விரைவில் தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.…
Read More
இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? – இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!

இமைக்கா நொடிகள் படத்தில் என்ன ஸ்பெஷல்? – இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி!

போனவருடம் கோலிவுட்டில் வெளியாகி ஹிட் அடைத்த டிமாண்டி காலனொ படத்தை இயக்கிய அஜய் தற்போது கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் சார்பில் தயாரிக்கும் படமான ‘இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தை டைரக்ட் செய்து வருகிறார்; இப்படத்தில் நயன் தாரா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். பெங்களூர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தொடர் கொலைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் குறித்து கூறிய இயக்குநர் அஜய் ஞானமுத்து, “சைக்கோ கொலையாளியை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. சைக்கோ கொலை என்றால் எந்தவித காரணமும் இருக்காது. ஆனால், இந்த படத்தில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பின்னணி ரொம்ப அழுத்தமான காரணம் இருக்கும். சமுதாயத்தில் முக்கியமானவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட, அந்த கொலைகள் ஏன் நடக்கிறது,…
Read More
ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் ‘முன்னோடி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் ‘முன்னோடி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள படம் ‘முன்னோடி’ எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, இன்னொருவர் 'குற்றம் கடிதல்' படத்தில் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.டி.ஏ.குமார். தொழிலதிபரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் அசிஸ்டெண்டாக பணிபுரியாமல் இயக்குனர் ஆகியிருக்கிறார். இதற்கும் முன் ஷூட்டிங்கைக் கூட வேடிக்கைப் பார்த்தது இல்லையாம். படத்தின் டைட்டிலுக்கேற்ப இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் தங்கள் முன்னோடிகளான தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களையும் தங்கள் இனிஷியலில் சேர்த்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனராக இருந்தாலும் படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் எடுத்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார்…
Read More
புலிமுருகன் – தமிழ்லே- அதுவும் 3டி யிலே ரிலீஸாகுது!

புலிமுருகன் – தமிழ்லே- அதுவும் 3டி யிலே ரிலீஸாகுது!

கேரளாவில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் `புலிமுருகன்'. வைஷாக் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமிதா, ஜெகபதிபாபு, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட  இந்தத் திரைப்படம், 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. `புலிமுருகன்' திரைப்படம் முதலில் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்தப் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவுசெய்துவிட்டது. தமிழில் ஜூன் முதல் வாரம் ரிலீஸ் செய்யப்படும் `புலிமுருகன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று  நடந்தது. விழாவில் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.பிரபு, பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், டப்பிங் யூனியன் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கே.டி.குஞ்சுமோன், நடிகர் நடராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர். பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, "நான் இந்தப் படத்தில் ரெண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் ஒரு பாடல் அம்மா சென்டிமென்ட் பாடல். இந்தப் பாடல்…
Read More