01
Feb
உலக நாயகன் என்று வர்ணிக்கப்படும் கமல்ஹாசனை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் ஏ.வி.எம்மின் "களத்தூர் கண்ணம்மா'. சிறுவனாக இருந்த கமல் நடிக்கும் ஆர்வத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அவருடைய மனதைக் கவர்ந்ததனால் "களத்தூர் கண்ணம்மா'வில் நடிக்கும் வாய்ப்பு கமலுக்குக் கிடைத்தது. முன்னதாக திரைப்படங்களை வாங்கி விநியோகித்த ஏ.வி.எம்.மின் பிள்ளைகள் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தடை கூறாது அனுமதி வழங்கினார்.அதற்கும் முன்னதாக பட்டுவும் கிட்டுவும் என்ற கதையைப் படித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நல்ல கதை. ஆனால் இப்போதைக்கு தன்னால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக ஜவார் சீதாராமனுக்கு தெரிவித்தார். படம் தயாரிப்பதற்கு தகப்பன் அனுமதி வழங்கிய பின்னர் கதையைத் தேடி அலைந்த சரவணனும் சகோதரர்களும் ஜவார் சீதாராமன் எழுதிய நல்ல கதை ஒன்று அப்பாவிடம் இருப்பதை அறிந்த பிள்ளைகள் அந்தக் கதையை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.…