எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

  இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர். லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய ரசு கண்ணதாசனின் வசனங்களை படித்த…
Read More
தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணையுமாம்!

தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணையுமாம்!

தனுஷ் நடித்த ‘3‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.குறிப்பாக தனுஷ், அனிருத் கூட்டணி கொலவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் என்ற நிலை இருந்தது.. ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவுடன் சேர்ந்து அனிருத் இசையமைக்கும் பீப் பாடல் மூலம் அனிருத்துக்கும் தனுஷ்க்கும் இடயிலான பிரிவு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்து நடித்த கொடி, பவர் பாண்டி படம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு ஷா ரோல்டன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்து இவர்கள் பிரிவு நிரந்தரம் என்றே தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தாங்கள் பிரிந்தது தற்காலிகம்தான். நான் மீண்டும் தனுஷ் படத்துக்கு இசைய மைப்பேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும்…
Read More
அட்லி இயக்கும் விஜய் -61 பட டீம் ஷூட்டிங்கிற்கு தயார்!

அட்லி இயக்கும் விஜய் -61 பட டீம் ஷூட்டிங்கிற்கு தயார்!

'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்காக அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.சத்யராஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். இதனிடையே இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின் பெரும்பகுதியை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டு வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். சமந்தா, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். எப்போதும் பொது, சினிமா விழாக்களுக்கு ஃப்ரெஷ்ஷாக தாடியில்லாமல் வந்து கொண்டிருந்த விஜய் சமீபகாலமாக தாடி வளர்த்து கொண்டு வருகிறார். அப்படி தாடியுன் விஜய் நடிக்கும் கேரக்டரை சஸ்பென்ஸாக மறைத்து செதுக்கி கொண்டு இருக்கிறார், அட்லீ. விஜய் தாடியுடன் நடிக்கும் அந்த காதாபாத்திரத்தின் ஜோடியாக, ஜோதிகா நடிக்க இருக்கிறார். விஜய்யுடன் படம் முழுக்க இணைந்து நடிக்கும் கேரக்டர் ரோலுக்கு…
Read More
ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 350 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மெருகேற்றும் விதமாக, அப்பணிகளுக்கு மேலும் 50 கோடியை ஒதுக்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் படத்தின் பொருட்செலவு சுமார் 400 கோடிக்கு ஆகியிருக்கிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின்  இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும்…
Read More
மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

"மாணவன் நினைத்தால்  நடத்திக் காட்டுவான்..." என்ற பழமையான பாடலின் வரிகள், தற்போது இருக்கும் சூழ்நிலையை மிக அழகாக அனைவருக்கும் உணர்த்துகின்றது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போராடி, அதில் வெற்றி கண்டிருப்பது, அவர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்துகிறது. அத்தகைய வலிமையான  மாணவ சக்தியை  மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். 'அட்டக்கத்தி மற்றும் 'மெட்ராஸ்' படங்களில் பா ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' படத்தை  'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.  பழம்பெரும் நடிகர் தியாகராஜன் மற்றும் 'அஞ்சாதே' நரேன் ஆகியோர் இந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த…
Read More
இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

வெற்றியடைந்த படங்களை விட மிக மோசமாக தோல்வியடைந்த படங்கள் தான் நமக்கு பெரிய படிப்பினைகளை தரும் என்பார்கள் சினிமா ஜீனியஸ்கள். அப்படி நமக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நிறைய படிப்பினைகளை இந்த ஆண்டு வாரி வழங்கிய படங்கள் இவை.. சாகசம் பிரஷாந்தையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கே வருவதில்லை. ஆனாலும் அவர் நடித்த ஒரு படம் ஏகப்பட்ட பில்டப்களுடன் இந்த ஆண்டு வெளியானது. வெளியான பின்னர் தான் அது ஒரு ஹிட் அடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் என தெரிய வந்தது. அம்புட்டு ரகசியமா வெச்சிருந்தாங்களாம்… அந்த ஹிட் படம் எடுத்த டைரக்டர் மட்டும் இந்த ரீமேக்கை பார்த்திருந்தால் கண்ணீர் விட்டு அழுதிருப்பார். அந்த அளவுக்கு படத்தை நாசமாக்கி இருந்தார்கள். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரிஜினல் படத்திலிருந்த சில காட்சிகளை அப்படியே வெட்டி இதில் சேர்த்தும் இருந்தார்கள். வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து காண்டாமிருகம் என்று பேர் வைத்த கதையை தன் மகனுக்கே செய்து அழகு பார்த்திருந்தார்…
Read More
வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதில் கண்டிப்பாக சுயலாபம் இருக்கும். தமிழ் கலாசாரத்தை வலியுறுத்தும், தமிழில் டைட்டில் வைக்கப்படும், சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெறும் படங்களுக்கு வரிவிலக்கு என்று அரசு அறிவித்திருக்கிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகும் தொடர்கிறது. ஆனால் சமீபகாலமாக இந்த எந்த கண்டிஷனிலும் வராத படங்களெல்லாம் வரிவிலக்கு பெற்று விடுகின்றன. எப்படி என்று விசாரித்தால் பகீர் உண்மைகள் வெளிவருகின்றன. முதல் கண்டிஷன் தமிழில் பெயர் வைப்பது… இது நடைமுறையிலேயே இல்லை. தமிழில் பெயர் வைக்கப்பட்ட உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டதை நாம் அறிவோம். ரெமோ போன்ற ஆங்கில டைட்டில் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கிறது. அடுத்து யு சர்டிஃபிகேட்… இங்கே யு சர்டிஃபிகேட் வாங்கி வரிவிலக்கு பெற்ற படங்கள் வெளிநாடுகளில் யு/ஏ சர்டிஃபிகேட் பெறுகிறது. தமிழ் சென்சாரின் லட்சணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நாம் விசாரித்த வரை முழுக்க முழுக்க கட்டிங்கே வரிவிலக்கை…
Read More
வைகை எக்ஸ்பிரஸ் : அடுத்த மாத வெளியீடு

வைகை எக்ஸ்பிரஸ் : அடுத்த மாத வெளியீடு

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ். அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே. மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க 'தண்ணில கண்டம்' படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார். எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது. இன்று வரை தொலைக்காட்சிகளில் ஆர் கே வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களில் இருந்து அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது. இக்கூட்டணி வெற்றி பெற்ற கூட்டணியாக வலம் வந்தது.…
Read More
நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

தன்னுடைய மனதை மயக்கும் இசையால், தமிழ் திரையுலகிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருபவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தரமான கதைக்களங்களை தேர்வு செய்து, அந்த கதைக்களத்திற்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுக்கும் ஜிப்ரான், தற்போது நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் 'அறம்' திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி, 'கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்து வரும் 'அறம்' திரைப்படம், வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக விளங்கி கொண்டிருப்பது, தண்ணீர் பஞ்சம் தான். அத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும் போது, நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின் பங்கும் பெரியளவில் இருக்கும். எங்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய கூடிய அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நாங்கள் யோசிக்கும் பொழுது, எங்கள் அனைவரின்…
Read More