பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

பக்ரீத் போன்று எந்த படமும் வந்ததில்லை, இனியும் வராது – விக்ராந்த்

எம்10 புரொடக்‌ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப் பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நாயகன் விக்ராந்த் பேசும்போது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம்…
Read More
ஜீவி படத்தில் என்ன ஸ்பெஷல்? நடிகர் வெற்றி பேட்டி!

ஜீவி படத்தில் என்ன ஸ்பெஷல்? நடிகர் வெற்றி பேட்டி!

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ள பாண்டியன், சுப்ரமணியம் வெள்ளபாண்டியன் தயாரித்திருக்கும் படம் – ஜீவி. இந்த படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருக்கிறார். பாபு தமிழ் கதை எழுதியிருக்கிறார். வெற்றி, மோனிகா சின்ன கோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஐரா புகழ் சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்திருக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதா பாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. “8 தோட்டாக்கள்” படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப் பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு,…
Read More
ராட்சசி தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள்!- ஜோதிகா பெருமிதம்

ராட்சசி தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள்!- ஜோதிகா பெருமிதம்

90களில் கோலிவுட் ரசிகர்களில் அபிமான ஹீரோயினாக இருந்த நடிகை ஜோதிகா தனது சினிமா வாழ்க்கையின் செகண்ட் எண்ட்ரியிலும் கலக்கி வருகிறார். அடுத்தடுத்து பெண்களுக்கும், சமுதாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கும் ‘ராட்சசி’ படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஜோதிகா அரசுப் பள்ளி ஆசிரியை யாக நடித்துள்ளார். இதில், பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர்.ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வரும் ஜீலை 5 ஆம் தேதி ரிலீசாகிறது.இந்நிலையில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஜோதிகா, “ட்ரீம் வாரியார் நிறுவனம் சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது.…
Read More
நான் கடந்து வந்த பாதை! – இன்று பிறந்த நாள் காணும் கலைப்புலி எஸ் தாணு நேர்காணல்!

நான் கடந்து வந்த பாதை! – இன்று பிறந்த நாள் காணும் கலைப்புலி எஸ் தாணு நேர்காணல்!

தமிழ் சினிமா எத்தனையோ தயாரிப்பாளர்களைக் கண்டிருந்தாலும் இவர் போல் யாருமில்லை என்று கடந்த முப்பதாண்டு களுக்கும் மேலாக கோலிவுட்டில் சிலாகிக்கப்படுபவர் கலைப்புலி எஸ். தாணு. ஆரம்பத்தில் கறுப்பு - வெள்ளப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து, சினிமாத் தொழிலில் காலடி வைத்தவர். பின்னர், பல்வேறு படங்களின் உரிமையைப் பெற்று விநியோகஸ்தராக வளர்ந்தவர். பைரவி' படத்தில் நடித்த ரஜினிக்கு,சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வழங்கியவர்…தான் தயாரித்த படமோ அல்லது ரிலீஸ் செய்யும் படமோ அதை தன்னுடைய பிரமாண்ட சிந்தனைகளுடன் நவீன் வணிக யுக்திகளை புகுத்தி அப்படத்திற்கு இமாலய வெற்றிகளையும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளை கொடுத்த பெருமை மிக்கவர் தாணு. இன்று பிறந்த நாள் காணும் அவருடன் ஒரு மினி நேர் காணல்: பள்ளி காலம் முதலே எனக்குள் கலைதாகம் இருந்தது. பேச்சுபோட்டி, பாட்டு போட்டி என பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். முன்னொரு காலத்தில் வடசென்னை வண்ணாரப்பேட்டையில் குடித்தனம் இருந்தோம். அங்கே,…
Read More
கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம்  “ நீர்முள்ளி “

கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம் “ நீர்முள்ளி “

ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ஹிட்லர்.J.K. கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் படத்திற்கு “ நீர்முள்ளி “ என்று பெயரிட்டுள்ளார். நாயகியாக சுமா பூஜாரி நடிக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி,நளினி, வீரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் அகத்தியன் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு - ஹிட்லர்.J.K. படம் பற்றி இயக்குனர் நடிகர் முசோலினி ஹிட்லர் கூறியதாவது… இது கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம். இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களை சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள், அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டமும் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி கதை இருக்கும். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை இந்த படம் கொடுக்கும். இது பெண்களுக்கான…
Read More
அல்லி நகர மாணவியை விண்வெளி செல்ல உதவிய விஜய் சேதுபதி!

அல்லி நகர மாணவியை விண்வெளி செல்ல உதவிய விஜய் சேதுபதி!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில்  அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் .தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள  நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5%  /  'A " கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" " சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது.  பயிற்சிச் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு இலட்சம்(8,00,000) ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது.   மாணவியின் பறிச்சிக்காக  தேவைப்படும் தொகையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன் ரசிகர்…
Read More
பக்கா பேமிலி என்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகுது  ‘சர்பத்’!

பக்கா பேமிலி என்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகுது ‘சர்பத்’!

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல் முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். படத்தில் நடக்கும் சூழலும் படத்தில்…
Read More
தும்பா படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் ஜெயம் ரவி!

தும்பா படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் ஜெயம் ரவி!

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான 'பேராண்மை' மற்றும் 'வனமகன்' போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த 'தும்பா' படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, "இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக வைக்க விரும்புகிறோம்,…
Read More
சிறகு ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்!

சிறகு ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்!

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசிய போது, “இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார் நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசுகையில், “என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி” என்றார். நடிகை டாக்டர் வித்யா, “23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு…
Read More
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்‘க/பெ ரணசிங்கம்’!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்‘க/பெ ரணசிங்கம்’!

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி - இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’  இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான கே ஜே ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.  இப்படத்தில் இயக்குனர் செல்வா மூலம் துணை இயக்குனராக திரைப்பயணத்தை துவங்கி, ‘அறம்’ உள்ளிட்ட பல வெற்றி…
Read More