நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஆந்தாலஜி படமான “பாவகதைகள்” டீஸர்!

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் ஆந்தாலஜி படமான “பாவகதைகள்” டீஸர்!

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றி மாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. மும்பை, நவம்பர் 27, 2020 : நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர் கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர். “பாவக்கதைகள்” காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது…
Read More
மானே நம்பர் 13 கன்னட திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ்!

மானே நம்பர் 13 கன்னட திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ்!

உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள். ஆம்.. மானே நம்பர் 13 திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விவி கதிரேசன் இயக்கத்தில், கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ், சேத்தன் கந்தர்வா, ஐஸ்வர்யா கவுடா, ப்ரவீன் ப்ரேம் மற்றும் வர்ஷா பொள்ளம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மும்பை, நவம்பர் 20, 2020: மானே நம்பர் 13 திகிலுக்கு தயாராகுங்கள். திகில் நிறைந்த வீட்டில் ஒரு ரோலர் - கோஸ்டர் பயணத்துக்கு உங்களை வரவேற்கிறோம். டேனிஷ் சேட் நடித்த கன்னட நகைச்சுவை திரைப்படமான ஃப்ரெஞ்ச் பிரியாணி மற்றும் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண் நடித்த குடும்ப திரைப்படமான பீமசேனா நளமஹாராஜா ஆகிய…
Read More
ஜி 5-ல் வர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) த்ரில்லர் வெப் சீரிஸான ‘பப்கோவா’!

ஜி 5-ல் வர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) த்ரில்லர் வெப் சீரிஸான ‘பப்கோவா’!

அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டது 'பப்கோவா' வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை. ஒரு கதை கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பற்றியது, மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியை தேடும் கதை. பிரபல நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'பப்கோவா' வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இசை: சாந்தன் எடிட்டர்: அஸ்வின் இக்னாஷியஸ் கலை இயக்குனர்: சிவ குமார் வரும் 27 முதல் ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது https://www.youtube.com/watch?v=hLYJhtmuqiM&feature=youtu.be
Read More
சர்வதேச விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது

சர்வதேச விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது

லண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது. மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘பச்சை விளக்கு’ . காதல் கலந்த, சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் திரைப்படமாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட APP ஆன OTTMOVIE App மற்றும்  www.ottmovie.in  ஆகிய இணைய தளத்தில் ‘பச்சை விளக்கு’ படம் தீபாவளி முதல் வெளியாக உள்ளது. OTTMOVIE APP யை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே ‘பச்சை விளக்கு’ படத்தை பார்த்து ரசிக்கலாம். அத்துடன், www.ottmovie.in என்ற இணையத்தளம் மூலமாகவும் படத்தை பார்க்கலாம். Yes. Stay Home.Stay Entertained. காதல் கலந்த சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் படமான ‘பச்சை விளக்கு’ படம் குறித்து இயக்குநர் மாறன் கூறுகையில், “பிரதமர் மோடி அவர்கள் ‘மான் கிபாத்’ நிகழ்ச்சி மூலம் பேசிய போது,சாலை விபத்தினால்…
Read More
மிகவும் மகிழ்ச்சி – சூரரைப் போற்று ரிலீஸ் குறித்து சூர்யா!

மிகவும் மகிழ்ச்சி – சூரரைப் போற்று ரிலீஸ் குறித்து சூர்யா!

வாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று வெளியீட்டை முன்னிட்டு ஒரு விசேஷ போஸ்டருடன் சூர்யா தனது ரசிகர்களை கவுரவித்தார் ‘சிம்ப்ளி ஃப்ளை’ என்ற புத்தகத்தின் கற்பனை வடிவமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான சூரரை போற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகும் வேளையில், ஒரு விசேஷ போஸ்டரை சூர்யா மிக உயரமான இடத்திலிருந்து வெளியிட்டார். ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்திய மில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. இதை முன்னெடுத்துக் கொண்டு செல்லும் வகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்துக்காக தங்கள் அன்பையும் ஆதரவையும் பொழிந்த சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் அற்புதமான ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பொழுதுபோக்குத் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக கடல் மட்டத்தில் இருந்து 34000 அடி…
Read More
ஒரே நாளில் பிரமாண்டமான கிளைமாக்ஸ் ஷூட் – மூக்குத்தி அம்மன் டீம் ஹேப்பி!

ஒரே நாளில் பிரமாண்டமான கிளைமாக்ஸ் ஷூட் – மூக்குத்தி அம்மன் டீம் ஹேப்பி!

லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு RJ பாலாஜி, NJ சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. பொது முடக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ள நிலையில்,…
Read More
நிச்சயமாக இந்த ’சூரரைப் போற்று‘ஒரு ப்ளாக் பஸ்டர் பயணம்- சூர்யா !

நிச்சயமாக இந்த ’சூரரைப் போற்று‘ஒரு ப்ளாக் பஸ்டர் பயணம்- சூர்யா !

"தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்"- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில முக்கிய தகவல்களை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு அங்கமாக, 200க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அனைத்து ப்ரைம் சந்தாதாரர்களுக்காக இப்படம் வரும் நவம்பர் 12 முதல் வெளியாகிறது. ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான சூரரைப் போற்று படத்தில் சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குறைந்த விலை விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான, கேப்டன். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றிய…
Read More
நான்கு இயக்குநர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி ‘விக்டிம்’

நான்கு இயக்குநர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி ‘விக்டிம்’

கோலிவுட்டில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் தாக்கம் பிரபலமாகி வருகிறது. , ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர். இந்நிலையில், புதிய ஆந்தாலஜி படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விக்டிம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் ஆக்சஸ் பிலிம் உதவியுடன் தயாரிக்கிறார். இவர்களில் பா.ரஞ்சித் ரஜினியை வைத்து காலா, கபாலி என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் வெங்கட் பிரபு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கி உள்ளார். சிம்புதேவன் விஜய்யின் புலி படத்தை இயக்கியவர். இவர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாலும்…
Read More
சூரரைப் போற்று படத்துக்கு என்ஓசி கிடைப்பதில் ஏன் லேட்? – சூர்யா பேட்டி!

சூரரைப் போற்று படத்துக்கு என்ஓசி கிடைப்பதில் ஏன் லேட்? – சூர்யா பேட்டி!

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவி பிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர் பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன் முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது இதோ : ‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..? சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப் பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள்…
Read More
இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- கிச்சா, கலை- பிரேம், எடிட்டிங் -பென்னி, நடனம் - சந்தோஷ், சண்டைக்காட்சிகள்- பிரதீப் தினேஷ் .டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும். கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல  செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான். முழுக்க முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் படமாகி உள்ளது. படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும் போது,"கொரோனா காலத்தில் குறிப்பிட்ட முப்பதே நாட்களுக்குள்…
Read More