நிச்சயமாக இந்த ’சூரரைப் போற்று‘ஒரு ப்ளாக் பஸ்டர் பயணம்- சூர்யா !

நிச்சயமாக இந்த ’சூரரைப் போற்று‘ஒரு ப்ளாக் பஸ்டர் பயணம்- சூர்யா !

"தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்"- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில முக்கிய தகவல்களை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு அங்கமாக, 200க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அனைத்து ப்ரைம் சந்தாதாரர்களுக்காக இப்படம் வரும் நவம்பர் 12 முதல் வெளியாகிறது. ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான சூரரைப் போற்று படத்தில் சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குறைந்த விலை விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான, கேப்டன். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றிய…
Read More
நான்கு இயக்குநர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி ‘விக்டிம்’

நான்கு இயக்குநர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி ‘விக்டிம்’

கோலிவுட்டில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் தாக்கம் பிரபலமாகி வருகிறது. , ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் இணைந்து நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர். இந்நிலையில், புதிய ஆந்தாலஜி படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விக்டிம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் ஆக்சஸ் பிலிம் உதவியுடன் தயாரிக்கிறார். இவர்களில் பா.ரஞ்சித் ரஜினியை வைத்து காலா, கபாலி என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் வெங்கட் பிரபு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கி உள்ளார். சிம்புதேவன் விஜய்யின் புலி படத்தை இயக்கியவர். இவர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாலும்…
Read More
சூரரைப் போற்று படத்துக்கு என்ஓசி கிடைப்பதில் ஏன் லேட்? – சூர்யா பேட்டி!

சூரரைப் போற்று படத்துக்கு என்ஓசி கிடைப்பதில் ஏன் லேட்? – சூர்யா பேட்டி!

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவி பிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர் பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன் முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது இதோ : ‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..? சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப் பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள்…
Read More
இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

இது வரை திரைக்கே வராத புத்தம் புதிய திரைப்படம்’ நாங்க ரொம்ப பிஸி’ – உங்கள் சன் டிவியில்!

சுந்தர் .சி யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரசன்னா, ஷாம் , அஸ்வின் காக்கு மனு, யோகி பாபு, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவு- கிச்சா, கலை- பிரேம், எடிட்டிங் -பென்னி, நடனம் - சந்தோஷ், சண்டைக்காட்சிகள்- பிரதீப் தினேஷ் .டீமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. இக்கதையில் நகைச்சுவை மேலோங்கியிருந்தாலும் ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் கலந்திருக்கும். கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் சூழலில் அரசின் பாதுகாப்பு வழி முறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல  செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு கொரோனா காலத்திலேயே முடிக்கப்பட்ட படமும் இதுதான். முழுக்க முழுக்க சென்னையில் பல்வேறு இடங்களில் படமாகி உள்ளது. படம் பற்றி இயக்குநர் பத்ரி பேசும் போது,"கொரோனா காலத்தில் குறிப்பிட்ட முப்பதே நாட்களுக்குள்…
Read More
சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி போச்சு!- ஏன்? சூர்யா விளக்கம்!

சூரரைப் போற்று ரிலீஸ் தள்ளி போச்சு!- ஏன்? சூர்யா விளக்கம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனவே ஓடிடி அமேசானில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்து அக்டோபர் 30ல் ரிலீஸ் என அறிவித்தார் சூர்யா. சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சூர்யா தன் முடிவை மாற்றவில்லை. இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு என தெரிவித்து ரசிகர்களுக்கு விளக்க கடிதம் கொடுத்துள்ளார் சூர்யா. இதோ…
Read More
புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இந்தப் படங்களை இயக்கியிருக்கிறார்கள். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம்…
Read More
என் வாழ்க்கையே சர்ச்சைகள் நிரம்பியதுதான் – 800 திரைப்படம் குறித்து முத்தையா முரளிதரன்!

என் வாழ்க்கையே சர்ச்சைகள் நிரம்பியதுதான் – 800 திரைப்படம் குறித்து முத்தையா முரளிதரன்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையின் விளையாட்டு சாதனை வரலாற்றை படமாக 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கவும் அதில் விஜய் சேதுபதி நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், ராஜபக்சேவின் இன்னொரு முகம் எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடங்கி ஏகப்பட்ட விஐபி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்க அறிக்கையில், "இது நாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய…
Read More
மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’-அமேசானில் ரிலீஸ்!

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’-அமேசானில் ரிலீஸ்!

மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர் களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை (2020 அக்டோபர் 9) அட்டகாசமான வடிவத்தில் வெளியான ‘மாறா’ பட ஃபர்ஸ்ட் லுக், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசான் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக் குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓவியம் போல் அமைந்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னணி கதாபாத்திரங்கள் இருவரும், மனதை கவரும் தோற்றத்தில், போஸ்டரின் வேறு வேறு பக்கங்களில் இருக்க, போஸ்டரில் இரு வேறு களங்கள் காட்சியளிக்கிறது. ஒரு கடற்கரை பகுதி மற்றும் ஒரு மலைப்பகுதி அதில் எதையோ தேடி…
Read More
error: Content is protected !!