ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

  கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'பிளாக்மெயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், முதல் பார்வைக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பிற்காக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மர்ம பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்குமார் இருக்கும்படியான முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம் மே 2025 இல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக தேஜு…
Read More
’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார். நடிகர் சத்யா…
Read More
தவெக மீது பொறாமையில் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள் –  சௌந்தர ராஜா!

தவெக மீது பொறாமையில் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள் – சௌந்தர ராஜா!

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர். இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் அவர்களின் அன்பு தம்பியுமான திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார். மேலும் இந்த நிகழ்விற்கு கழகத் தலைவர்…
Read More
தேன் குரல் ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

தேன் குரல் ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

சவுத்திலிருந்து தென்றலாய் வீசிய குரல்களைப் போலவே, நார்த்திலிருந்து வீசிய வாடைக் குரல்களுக்கும் கோலிவுட் சினிமாவில் பஞ்சமில்லைதான். கான்பூரைப் பூர்விகமாகக் கொண்ட கே.ராணி, கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, மதுஸ்ரீ, இந்தியாவின் வானம்பாடி சகோதரிகள் லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே, சாதனா சர்கம், மால்குடி சுபா, மகாலஷ்மி ஐயர், டெல்லியில் பிறந்த கவிதா கிருஷ்ணமூர்த்தி அப்படீன்னு தமிழ் தெரிஞ்ச, தெரியாத பாடகியர் பலர் இருந்தாலும் பாடல்களின் எண்ணிக்கை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவர் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் விதம், விருதுகளின் எண்ணிக்கை ஆகிய அளவுகோல்களில் ஸ்ரேயா கோஷல் தொட்ட உயரத்தைத் தொட்டதில்லை என்பதுதான் உண்மை. தமிழில் மட்டுமே 250 பாடல்களைப் பாடி முடிச்சுப்புட்டார். அந்த ஒரு குரல்.. பல சாதனைகளை படைத்தும், உடைத்தும் உள்ளது அந்த குரல்..எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திடாத புகழுக்கு சொந்தகாரி அவர் இசை மேடைகளில், மேக் சம் நாய்ஸ், (make some noise) கம்…
Read More
மணிரத்னத்தின் ‘பம்பாய்’ ரிலீசான நாளின்று!

மணிரத்னத்தின் ‘பம்பாய்’ ரிலீசான நாளின்று!

சில சினிமாக்க காலத்தால் அழியாதவை. அவை வெளிவந்த காலகட்டத்தில் மட்டுமின்றி எப்போது பார்த்தாலும் புதுத்தன்மையும் மெருகும் குறையாமல் அப்படியே ஒவ்வொரு சூழலிலும் புது செய்தி சொல்லியபடி இருக்கும். அழகியல்ரீதியான படமாக இருந்தாலும் சரி, அரசியல் படங்களானாலும் சரி, ஒரு கதையைத் திரைக்குள் செலுத்தி நிரந்தரத்தன்மை அடையச் செய்வது என்பது அசாதாரண விஷயம் என்பதை சினிமா தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அம்புட்டு பேரும் ஒப்புக் கொள்வாய்ங்க. டைரகடர் மணிரத்னத்தின் பல படங்கள் இந்தச் சட்டகத்தினுள் அடங்கும். இதே மார்ச் 11, 1995-ஆம் வருஷம் ரிலீஸான 'பம்பாய்' முப்பது ஆண்டுகள் கழிச்சும், இன்று பார்த்தாலும் அரசியல்ரீதியாக மட்டுமின்றி படைப்பு சார்ந்தும் அது சொல்லும் மெசெஜில் தனித்தன்மையுடன் திகழ்கிறது என்பது நெசந்தானே? மனிதர்களைச் சுமந்து செல்லும் படகுகள்...தலைக்கு மேல் கடகடவென சப்தமெழுப்பிச் செல்லும் ரயில்வண்டி...குளிரக் குளிர சில்லென்று கடல் நீரின் வேகத்தில் வீசும் காற்று... முகத்தில் மோதும் நெல்லை மண்ணின் மாங்குடி, சேகர், ஷைலா பானு ஆகிய…
Read More
சேட்டன் சிங்கர் ஜெயசந்திரன் காலமானார்

சேட்டன் சிங்கர் ஜெயசந்திரன் காலமானார்

சிலரோட குரல் அம்புட்டு பேருக்கும் பிடிச்ச குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா மியூசிக் டைரக்டர்களுக்கும் அட்ராக்ட்டிவான குரலாக அமைஞ்ச்சிருக்கும். அப்படி, இசையமைப்பாளர் உணர்வுக்குப் பொருத்தமான குரல் கிடைச்சுட்டா, நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்! முன்னொரு கால சினிமாவில் கனமான குரல் வளம் கொண்ட பாடகர்கள் தான் அதிகம் இருந்தாய்ங்க. அவிய்ங்களை முன்னிலைப்படுத்தியே அந்த கால திரையிசை உலகமும், வெள்ளித் திரையும் இயங்கி வந்துச்சு. எம்.ஜி,சிவாஜி மற்றும் அதன் பிறகு ரஜினி, கமல் போன்றவர்களின் வருகையால் திரையுலகம் மென்மையான குரல்வளம் கொண்டவர்களால் நிறைஞ்ச்சிது. அந்த சமயத்தில் அவர்களைப் போன்ற இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க எஸ்.பி.பி. என்ற பிதாமகன் கிடைத்தார். அதே போன்று எந்தவொரு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நதியோட்டமாக மனதை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரும் தங்களது ஆளுமையால் திரையிசையை ஆண்டு வந்த சமயத்தில்…
Read More
புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாள்!

புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாள்!

முன்னொருக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் பெருமைப்படுத்தப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிந்தைய காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது. ‘எம்.கே.டி. படம்’ என்றார்கள். ‘பி.யு.சின்னப்பா’ படம் என்றார்கள். ‘கிட்டப்பா’ படம் என்றார்கள். ‘சிவாஜி படம்’ என்றார்கள். ‘எம்ஜிஆர் படம்’ என்றார்கள். அப்படி இருந்த நாயக பிம்பங்களில் இருந்த சினிமாவை, இயக்குநர் பக்கம் திசை திருப்பியது கலங்கரை விளக்கம் ஒன்று. கேப்டனை விட்டுவிட்டு, கப்பலில் பயணித்தவர்களைச் சிலாகித்ததை விடுத்து, கேப்டனின் லாகவத்தை எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேப்டனாகத் திகழ்ந்தவர்... டைரக்டர் ஸ்ரீதர். ஆம்.. நம் தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது படைப்புகளுக்கு உண்டு. திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கியபோதும் சரி; இரண்டாம்…
Read More
பராசக்தி  ரிலீஸான நாளின்று(1952)!

பராசக்தி ரிலீஸான நாளின்று(1952)!

‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!’’ -ஒவ்வொரு வார்த்தையாக திரையில் ஒலிக்க.. ஒலிக்க.. தமிழ்நாடே கையை தூக்கி இரண்டு இளைஞர்களிடம் சரண்டர் ஆனது. ஒவ்வொரு வசனத்தையும் திருக்குறளைப்போல மனப்பாடம் செய்து ஒப்பித்தது. தமிழகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த திரைப்படம் உருவாக்கியது. அந்த வசனங்கள் அரை நூற்றாண்டுகளுக்கு பின்னும் தமிழகமெங்கும் அன்றாடம் எங்காவது நினைவு கூறப்படுகிறது. பராசக்தி படத்துக்கு இந்த நாளோடு எழுபத்து இரண்டு வயதாகிவிட்டது. 1952ஆம் ஆண்டின் தீபாவளி தினம் அன்று. சிவாஜி கணேசனுக்கு அதுதான் முதல் படம். வசனம் எழுதியிருந்த மு. கருணாநிதிக்கு அது ஏழாவது படம். தமிழ்நாட்டில் படம் வெளியான திரையரங்குகளில் எல்லாம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்காக அந்த நேரத்தில் கருதப்பட்ட மதுரை தங்கம் திரையரங்கத்தில் முழுமையாகக்கூட கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. முதல் படமாக பராசக்தி வெளியானது. சுமார் 2,500 பேர் அமரக்கூடிய…
Read More
பிரதர் ஆடியோ லாஞ்சில் ஜெயம்ரவி சொன்ன ஹீலிங் – டீடெய்ல் ரிப்போர்ட்!

பிரதர் ஆடியோ லாஞ்சில் ஜெயம்ரவி சொன்ன ஹீலிங் – டீடெய்ல் ரிப்போர்ட்!

ஜெயம்ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.இதில் கதாநாயகன் ஜெயம்ரவி, கதாநாயகி பிரியங்கா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டாய்ங்க நிகழ்ச்சியில் நாயகன் ஜெயம்ரவி பேசியது : “ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.எனது முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுத்த்தீர்களோ அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பீர்கள் என்று தெரியும்.மக்களை சந்தோஷப்படுத்துவது தான் எனது வேலை. குழந்தை போல என்னை வழி நடத்துவது ஊடகம் தான்.பிரதர் என்ற தலைப்பை நான் தான் படத்திற்கு வைத்தேன்.அக்காவுக்கும் தம்பிக்குமான அழகான திரைக்கதை தான் பிரதர் படம்.  பிரதர் படத்தின் பாடல்கள் பிடிச்சிருந்துச்சா. நீங்கள் எல்லோரும் சொல்றதுக்கு முன்னாடி, முட்டி ஸ்டெப் ஆட வரல. சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த என் பையன் ஆரவ், என்னப்பா.. வயசாகிடுச்சா.. அப்படின்னு கேட்டான். தாங்கவே முடியல.…
Read More
மண்வாசனை வெளியான நாளின்று!

மண்வாசனை வெளியான நாளின்று!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 1983-ம் ஆண்டு இதே செப் 15இல் வெளியானது ‘மண் வாசனை’.‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் டைரக்‌ஷனில் உருவான இந்தப் படத்தில்தான் நடிகை ரேவதியும், நடிகர் பாண்டியனும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானாய்ங்க அதோடு இந்தப் படம்தான் பத்திரிகை தொடர்பாளர், , இயக்குநர், நடிகருமான சித்ரா லட்சுமணன் தயாரிச்ச முதல் படமாகும். பாரதிராஜாவின் படைப்புகளில் ‘கிராமத்துச் சாயல்’ இருந்ததைப் போலவே வணிக அம்சங்களைக் கொண்ட ‘சினிமா’வும் அதிகம் இருந்துச்சு. அசலான கிராமத்து மனிதர்கள் ஒருபுறம் நடமாடிக் கொண்டு இருப்பாய்ங்க என்றால் அதன் இன்னொரு பக்கம் மரத்தின் மறைவில் இருந்து ஒரு கண் மட்டும் தெரிய வெட்கப்பட்டு வானத்தை நோக்கி சிரிக்கும் ‘சினிமா ஹீரோயினும்’ இருந்தார். இப்படி யதார்த்தமும் ரொமாண்டிசஸம் ஆகிய இரு பண்புகளும் கலந்ததுதான் பாரதிராஜாவின் சினிமா.பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் கிராமத்துக் கலாசாரமும் பண்பாடும் நிலவெளியின் அழகியலும் மிக வலுவாக வெளிப்பட்ட படைப்புகளில் முக்கியமானது ‘மண் வாசனை’.தலைப்பிற்கு…
Read More