09
Jan
சிலரோட குரல் அம்புட்டு பேருக்கும் பிடிச்ச குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா மியூசிக் டைரக்டர்களுக்கும் அட்ராக்ட்டிவான குரலாக அமைஞ்ச்சிருக்கும். அப்படி, இசையமைப்பாளர் உணர்வுக்குப் பொருத்தமான குரல் கிடைச்சுட்டா, நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்! முன்னொரு கால சினிமாவில் கனமான குரல் வளம் கொண்ட பாடகர்கள் தான் அதிகம் இருந்தாய்ங்க. அவிய்ங்களை முன்னிலைப்படுத்தியே அந்த கால திரையிசை உலகமும், வெள்ளித் திரையும் இயங்கி வந்துச்சு. எம்.ஜி,சிவாஜி மற்றும் அதன் பிறகு ரஜினி, கமல் போன்றவர்களின் வருகையால் திரையுலகம் மென்மையான குரல்வளம் கொண்டவர்களால் நிறைஞ்ச்சிது. அந்த சமயத்தில் அவர்களைப் போன்ற இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க எஸ்.பி.பி. என்ற பிதாமகன் கிடைத்தார். அதே போன்று எந்தவொரு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நதியோட்டமாக மனதை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரும் தங்களது ஆளுமையால் திரையிசையை ஆண்டு வந்த சமயத்தில்…