30
Mar
27
May
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னொரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்த இவர் தற்போது மாமன்னன், சைரன் ஆகிய 2 படங்கள் கைவசம் உள்ளன. அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் ‘போலோ சங்கர்’ படத்தில் சிரஞ்சீவியிடன் நடித்து வாறார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி ரேவதி சுரேஷ் டைரக்டராகி இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சகோதரி ரேவதி சுரேஷ் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தனது…
27
May
குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது. அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன. வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக்…
13
May
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் "நந்தா பெரியசாமி" இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது.கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி மொத்தமாக தேதிகள் தந்து முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் முதன்மை கதா பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நாயகி அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை அனன்யா நாடோடிகள் படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'சீதா ராமம்' படப்புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.சினேகன், இயக்குநர் ராஜூமுருகன்,…
07
May
கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டாடா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் அடுத்ததாக பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் சதிஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் கவின். இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க தற்போதைய சென்சேஷன் நடிகை ப்ரீத்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறாராம்.நடிகை ப்ரீத்தி சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அயோத்தி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் - ப்ரீத்தி இணையும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
03
Jul
உலகளாவிய இசை நிறுவனமான Sony Music மற்றும் ஹைதராபாத் கிக்-ன் Knack Studios உடன் தனது ஒத்துழைப்பை அமேசான் ப்ரைம் ம்யூசிக் இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புத்தம் புதிய ஒரிஜினல் தெலுங்கு பாப் இசையை அமேசான் ம்யூசிக் வழங்குகிறது. 2020 ஜூலை முதல், இந்த தனித்துவமான இசை அனுபவம், தெலுங்கு சினிமாவின் பிரபலமான இசை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய, உயர்ந்த தரம் கொண்ட இசையை வழங்குகிறது. அவர்கள் பாப் இசையில் மிகச்சிறந்த பலவகையான தீம்களுடன் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து ஹைதரபாத் கிக் பாடல்களும் ப்ரைம் சந்தாதாரர்களுக்கென பிரத்யேகமாக முதன்முதலில் அமேசான் ப்ரைம் ம்யூசிக் தளத்தில் கிடைக்கும். இது விளம்பரங்கள் இல்லாத, வாய்ஸ் இயக்கத்துடன் கூடிய கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது.. அமேசான் ப்ரைம் ம்யூசிக் இயக்குநர், சஹஸ் மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: “புதிய, அசலான தெலுங்கு பாப் பாடல்களை கண்டறிவதற்கான ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை ஹைதரபாத் கிக் வழங்குகிறது.…