வைரமுத்து வெளியிட்ட சித்தார்த் பன்னீரின் ‘மிஸ் மேல கிரஷ்’ வீடியோ ஆல்பம் !!

நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், திரு. கடம்பூர் ராஜா, திரு. ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு…
Read More
100 கோடி பட்ஜெட்டில்  உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ !!

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ !!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள். தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள்…
Read More
இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ !!

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ !!

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்! ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்‌ஷன்…
Read More
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலை!!

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலை!!

சென்னையைச் சேர்ந்த 11 வயது இளம் வீரர் ரிவான் தேவ் பிரீத்தம், இந்திய தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் (International Karting Championship) பட்டத்தை இருமுறை வென்றுள்ளார். மேலும், 2024 அக்டோபர் மாதத்தில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்ற FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். இளம் சாதனையாளரான ரிவான் இன்று தமிழ்நாடு மாநில மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளம் வீரருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள காசோலையை துணை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார். தமிழக அரசின் புதிய முன்னோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ், மோட்டார் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் ஒருவருக்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இச்சாதனை,…
Read More
ஹாரர் காமெடி ஜானரில் கலக்கும் பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியானது !!

ஹாரர் காமெடி ஜானரில் கலக்கும் பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியானது !!

மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் "ஹேப்பி பர்த்டே" ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக பிரபாஸின் பிரமாண்ட தோற்றம் காண்பிக்கபடுகிறது. பழங்கால அரண்மனையின் பிரமாண்ட பின்னணியில், கறுப்பு உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸை வெளிப்படுத்தும் இந்த போஸ்டர், சூப்பர் ஸ்டாரின் கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது. ராஜாவாக…
Read More
டாடா பட இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஜெயம் ரவி!

டாடா பட இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஜெயம் ரவி!

'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது. ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள 'ஜெ ஆர் 34' என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. 'அகிலன்' மற்றும் 'பிரதர்' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன்…
Read More
மும்பை திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது ‘கோடித்துணி’ !

மும்பை திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது ‘கோடித்துணி’ !

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் "அங்கம்மாள்". இப்படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாக மாறுவதும், அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெறுவதும் இதுதான் முதன்முறை. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள அங்கம்மாள் படத்தை என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெருமாள் முருகனின் ‘கோடித்துணிக்கு புதிய உருவத்தை தரும் விதமாக அங்கம்மாள் உருவாகியுள்ளது.
Read More
தளபதி 69′ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது!

தளபதி 69′ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது!

  தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், 'தளபதி' விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான "தளபதி 69" துவங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட எச். வினோத் இயக்கத்தில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் அனிருத் இசையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மகத்தான திரைக் கூட்டணியாக அமைகிறது. படத்தின் நடிகர்கள்,தொழில்நுட்ப குழுவினர் மற்றும் திரைத்துறையின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான பூஜை விழாவுடன் படம் இன்று தொடங்கியது.   "தளபதி 69" படம் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப் படங்களை வழங்கிய 'தளபதி' விஜய், தனது அழுத்தமான மற்றும் யதார்த்தமான திரைப்பட உருவாக்கதிற்கு பெயர் பெற்ற எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய மற்றும் பிடிப்பான கதைக்களத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க உள்ளார்.…
Read More
படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும்! ஆலன் திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும்! ஆலன் திரைப்பட இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். இந்த நிகழ்வில், ஜி. தனஞ்ஜெயன் பேசியதாவது, '' இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற…
Read More
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி அறிவிப்பு வெளியானது!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி அறிவிப்பு வெளியானது!

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் Icon ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music Concert யை நடத்தவுள்ளார். Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து…
Read More