காளி படத்தின் ‘அரும்பே’ பாடல் – வீடியோ!

காளி படத்தின் ‘அரும்பே’ பாடல் – வீடியோ!

புதுமைக்கு பெயர் போனவை விஜய் ஆண்டனியின் படங்கள். கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான 'காளி' தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளது. 'காளி' படத்திற்காக சிறந்த டியூன்களை விஜய் ஆண்டனி தந்துள்ளார் என கூறப்படுகிறது. 'காளி' படத்தின் 'அரும்பே' பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் ரிலீஸ் செய்தார் . இந்த பாட்டோடு இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த 'அரும்பே' பாடல் ரசிகர்களின் இலவச சட்டப்பூர்வமான டவும்லோடிற்கு Vijayantony.com என்ற இணையதளத்தில் தயாராகவுள்ளது. இந்த 'அரும்பே' பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இது குறித்து பாடலாசிரியர் விவேக் பேசுகையில் , '' விஜய் ஆண்டனி சாரின் இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் இது. அவருடன் பணிபுரிந்து அருமையான அனுபவமாகும். கிருத்திகா அவர்களுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந்திருந்தாலும் ஒரு படத்திற்காக அவருடன் பணிபுரிவது இது தான்…
Read More
‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே ஹிட்!

‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே ஹிட்!

'பலூன்' படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான 'ஜருகண்டி' படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள்  இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கிவருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி என்பது அனைவரும் அறிந்ததே. 'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  நேற்று, இந்திய முழுவதும் மொழி எல்லைகளை தாண்டி  தனக்கென ரசிகர்களை பெற்றிருக்கும்  பிரபல இயக்குனர் A R முருகதாஸ் அவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டது. நல்ல சினிமாவை என்றுமே ஊக்குவிப்பவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த ஆதரவு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைவது நிச்சயம். ''நல்ல படங்களை என்றுமே பாராட்டி ஆதரவு தரும் A R முருகதாஸ் அவர்கள் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் படத்தின்  90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் '' என…
Read More
‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர் – ஈரானிய இயக்குநர் மஜீத்-த்துக்கு பாராட்டு மழை!

‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர் – ஈரானிய இயக்குநர் மஜீத்-த்துக்கு பாராட்டு மழை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தைப் பற்றியும், ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியினைப் பற்றியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாய் குட்டி பேசுகையில்,‘இந்த படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனனையும், வங்காளத்தைச் சேர்ந்த…
Read More
கமல் & ஷங்கர் கூட்டணியில் தயாராகப் போகும் இந்தியன் 2ல் நயன்தாரா?

கமல் & ஷங்கர் கூட்டணியில் தயாராகப் போகும் இந்தியன் 2ல் நயன்தாரா?

கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் இந்தியன் 2இல் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் 2.0 படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் வேகம் காட்டிவரும் ஷங்கர் இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 20 வருடங்களுக்கு அதன் இரண்டாம் பாகத்தை கமலுடன் இணைந்து உருவாக்கவிருக்கிறார். இது குறித்தான அறிவிப்பை தைவான் நாட்டில் படக் குழுவுடன் பலூன் ஒன்றை பறக்கவிட்டு உறுதிப்படுத்தினார். இப்படத்தின் கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியனில் சேனாதிபதி, சந்திரபோஸ் என்ற இரண்டு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக மனீஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். 70 வயதான சேனாதிபதி கேரக்டரில் ஊழலுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப் போராட்ட தியாகியாக கமல்ஹாசன் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படமும் அரசியல், சமூகப் பிரச்சினைகளைப் பேசும் படமாக உருவாகவிருக்கிறது. அரசியலில் களமிறங்கியிருக்கும் கமலுக்கும் இந்தப்…
Read More
“மனுசனா நீ” எனது முதல் படம் என்றாலும்…! – டைரக்டர் கஸாலி ஹேப்பி!

“மனுசனா நீ” எனது முதல் படம் என்றாலும்…! – டைரக்டர் கஸாலி ஹேப்பி!

“H3 சினிமாஸ்” நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “மனுசனா நீ”. பிப்ரவரி வெளியீடாக வரவுள்ள “மனுசனா நீ” படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. “மனுசனா நீ” படத்தின் போஸ்டரை பார்ப்பவர்கள் அனைவருமே, அதைப்பற்றிப் பேசாமல் கடந்து செல்வதில்லை. பொய், பித்தலாட்டங்கள், கோடிக்கணக்கில் கொள்ளை எல்லா தொழிலிலும், துறையிலும் இருக்கும். அப்படி மக்கள் வாழ்க்கையோடு தினசரி தொடர்புடைய ஒரு துறையில் பணத்திற்காக நடக்கும் அநீதியைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது “மனுசனா நீ”. துபாயில் பிஸினெஸ் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த நீண்ட காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்தார். தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், வெளியீடு என எல்லாத்துறைகளில் உள்ள பிரச்சினைகளையும் நேரடியாக சந்தித்த அனுபவம் கஸாலியை யோசிக்க வைத்தது. தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களை விட வெளியாகாமல் போகிற படங்கள் பல…
Read More
மதுர வீரன் படத்தில் சண்முக பாண்டியன் ஏன்? – இயக்குநர் விளக்கம்!

மதுர வீரன் படத்தில் சண்முக பாண்டியன் ஏன்? – இயக்குநர் விளக்கம்!

விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடிக்கும் 'மதுர வீரன் ' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராகி பின்னர் தள்ளிப் போய் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகப் போகிறது. இப்படத்தை PG முத்தையா இயக்கி , விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் படம்.இந்த படத்தில் புது முக நாயகி மீனாட்சி அறிமுகமாகவுள்ளார்.இப்படம் ஜல்லிக்கட்டு பற்றியும் அதில் பங்கேற்கும் காளைகளை பற்றியும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அனுபவத்தை பேசிய இயக்குநர் முத்தையா, “நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால்…
Read More
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் –  2 !

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 !

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 " உருவாக உள்ளது.   இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்  அஞ்சலி, பரணி, அதுல்யா,எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு - ஏகாம்பரம் கலை - ஜாக்கி எடிட்டிங் -  ரமேஷ் பாடலாசிரியர் – யுகபாரதி சண்டை பயிற்சி -  திலீப் சுப்புராயன் நடனம் - திணேஷ், ஜானி மக்கள் தொடர்பு - மெளனம் ரவி   தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. நேற்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.
Read More
இமான் ரிலீஸ் செய்த ‘ ஜெயிக்க போவது யாரு? ஆடியோ!

இமான் ரிலீஸ் செய்த ‘ ஜெயிக்க போவது யாரு? ஆடியோ!

டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் “ ஜெயிக்க போவது யாரு “ இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் – சக்தி ஸ்காட்.  இசை   -  சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின். படம் பற்றி இயக்குனர் சக்தி ஸ்காட் கூறியதாவது... கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ்…
Read More
மாமனிதன் படத்துக்கு மேஸ்ட்ரோ இளையராஜாவால் அங்கீகாரம்

மாமனிதன் படத்துக்கு மேஸ்ட்ரோ இளையராஜாவால் அங்கீகாரம்

பிக் பாஸ் புகழ் ஹரீஷ், ரைஸா வில்சன் நடிப்பில் உருவாகும் 'பியார் பிரேம காதல்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இளம் இயக்கும் இந்த படத்துக்கு தயாரிப்பாளரான யுவனே இசையமைக்கிறார். காதல் அம்சங்களோடு மிக வேகமாக உருவாகி வரும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து ஒய்எஸ் ஆர் ஃபிலிம்ஸ் மூலம் தயாரிப்பாளராக அடுத்த படத்துக்கும் தயாராகி விட்டார் யுவன் ஷங்கர் ராஜா. முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் எமோஷன் மற்றும் டிராமாவாக உருவாகும் மாமனிதன் படத்தை தயாரிக்கிறார். இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானது படத்துக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்துள்ளது.  மாமனிதர் மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் விருது அறிவித்திருக்கும் இந்த வேளையில் அவர் எங்கள் படத்துக்கு இசையமைக்கிறார் என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறோம். அவர் படத்துக்குள் வந்தது தான் மாமனிதன் தலைப்புக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.…
Read More