மிகப்பெரிய நடிப்புக் களஞ்சியமான  ரகுவரன்!

மிகப்பெரிய நடிப்புக் களஞ்சியமான ரகுவரன்!

ரகுவரன்- மிகப்பெரிய, யாரும் எதிர்பார்க்க முடியாத திறமைகளுக்குச் சொந்தக்காரர். சினிமா ரசிகர் ஒவ்வொரு வருக்கும் நன்கு தெரிந்தவரும் கூட. 1980-ல் திரைப்படக் கல்லூரி மாணவராயிருந்த ஹரிஹரன், தனது சக மாணவரான ரகுவரனை வைத்து இயக்கிய படம் ஏழாவது மனிதன். தொழிற்சாலைக் கழிவுகளின் கெடுதலை விளக்கிய அந்தப் படத்துக்கு விருது கிடைத்தது. அடுத்து ஸ்ரீதர் இயக்கிய ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தில் சுமலதாவின் ஜோடியாக நடித்தார். இளையராஜாவின் நல்ல பாடல்கள், ஸ்ரீதரின் திரைக்கதை என எல்லாம் இரும்தும் வணிக ரீதியான வெற்றி கிட்டவில்லை அந்தப் படத்துக்கு. பின்னர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் இந்திரகுமாரி தயாரித்த ‘நீ தொடும்போது’ எனும் படத்தில் ராஜேஷ் – லட்சுமியுடன் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற ஏவிஎம்மின் 13 வார தொடர் ஒன்றில் நடித்தார். தனியார் தொலைக்காட்சிகள் வராத அந்த நாட்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.மீண்டும் ஏவிஎம்மின்…
Read More
கோடை விடுமுறை விருந்தாக  வரவிருக்கும் Mr.சந்திரமெளலி!

கோடை விடுமுறை விருந்தாக வரவிருக்கும் Mr.சந்திரமெளலி!

எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில்  'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர்.…
Read More
ஹைதராபாத் திரைப்படவிழாவில் விருது வென்ற ‘என் மகன் மகிழ்வன்’

ஹைதராபாத் திரைப்படவிழாவில் விருது வென்ற ‘என் மகன் மகிழ்வன்’

என் மகன் மகிழ்வன் (My Son is Gay) - ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது. மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்தேறிய பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு,வெகுவாக மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வரிசையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது  இந்தியன் வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது. துருக்கி, இஸ்தான்புல், அமெரிக்கா போன்ற பல நாடுகளை சேர்ந்த முக்கிய திரை பிரமுகர்களை நடுவர்களாக கொண்ட இந்த திரைப்படவிழாவில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் விருதுகளுக்கு போட்டியிட்ட நிலையில்,…
Read More
‘மேகம் செல்லும் தூரம்’ – மியூசிக் ஆல்பத்துக்கு இம்புட்டு ரெஸ்பான்ஸா? – மகிழ்ச்சியில் டீம்

‘மேகம் செல்லும் தூரம்’ – மியூசிக் ஆல்பத்துக்கு இம்புட்டு ரெஸ்பான்ஸா? – மகிழ்ச்சியில் டீம்

' மேகம் செல்லும் தூரம்’ - என்ற பெயரில் மியூசிக்கல் ஆல்பம் ஒன்றை இயக்குநர் ஷங்கரின் ‘2.0’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் குமார் இயக்கியுள்ளார். 11 நிமிடங்கள் கொண்ட இந்த மியூசிக்கல் காதல் கதை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் யூடியூப் –பில் ரிலீஸாகியுள்ளது. ஒரு இளம் புகைப்படக் கலைஞரின் பயணத்தை பின்னணியாகக் கொண்ட இப்படம் இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் மியூசிக்கல் கதையின் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண். இவர் ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 17 வயது இளம் இசையமைப்பாளர் ஜெட்ரிக்ஸ் இசையில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது மேலும் இதில் பாடலாசிரியராக பத்திரிகையாளர் ம.மோகன், எடிட்டர் அருள் மொழி செல்வன், பாடகர் கவுஸ்துப் ரவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். சென்னை மகாலட்சுமி திரையரங்க உரிமையாளர் சைலேந்தர் சிங் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆல்பம் குறித்து இயக்குநர் விக்னேஷ்…
Read More
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும்  ‘என் பெயர்  சூர்யா; என் வீடு இந்தியா’

அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா; என் வீடு இந்தியா’

சமீபமாக தென்னிந்திய திரை மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் தங்களது மொழி பிராந்தியத்தை தாண்டி , அடுத்த மாநிலங்களிலும்  தங்களது படங்கள் ஓட வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் கோலோச்சி வரும் அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் " என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா"  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.  தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனு இமானுவேல். தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும்  இந்தப் படத்தில் சரத் குமார்,  action king அர்ஜுன்  ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, மற்றும் பல்வேறு  நடிகர்களுடன் நதியா மிக முக்கியமான…
Read More
கண்ணே கலைமானே படம் என் கேரியரில் நல்ல படம்! – தமன்னா

கண்ணே கலைமானே படம் என் கேரியரில் நல்ல படம்! – தமன்னா

சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்  கடப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி என்றால் மிகையாகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள்தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர். மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு  அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும்  அடுத்த படமான ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விநியோகத்தர்கள் மத்தியிலும், பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ‘Red Giant Movies’ நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா, கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.  ‘கண்ணே கலைமானே’  படத்திற்கான தனது படப்பிடிப்பினை சமீபத்தில் முடித்தார் தமன்னா. இது குறித்து தமன்னா பேசுகையில், “நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது…
Read More
காமெடி கலாட்டாவாக தயாராகியுள்ள ‘ அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

காமெடி கலாட்டாவாக தயாராகியுள்ள ‘ அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ‘Auraa Cinemas’, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில்  நிறைவு பெற்றுள்ளது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில்  இந்த படத்தில் நடித்துள்ளனர்.  நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்டை’ ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதர்ஷன் ஒளிப்பதிவில், எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத் தொகுப்பில், மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகியுள்ளது.  புதுமுகம்  அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நையாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். இந்தப் படம் பற்றி இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் பேசும்போது, “தமிழ்ச் சினிமா இன்றைக்கு இருக்கும் சூழலில் ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு…
Read More
கோலிவுட்-டில் நோ ஷூட்டிங் & போஸ்ட் புரொடக்‌ஷன்! – ஆனா மல்டிபிள் தியேட்டர்கள் ஓடுது!

கோலிவுட்-டில் நோ ஷூட்டிங் & போஸ்ட் புரொடக்‌ஷன்! – ஆனா மல்டிபிள் தியேட்டர்கள் ஓடுது!

திரைத் துறைக்கு க்யூப், யுஎப்ஓ எனப்படும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் கட்டண குறைப்பை வலியுறுத்தி கடந்த 3 வாரங்களாக தயாரிப்பாளர் சங்கம் புதுப்பட வெளியீடுகளை வைத்தது ,இதனால் எப்போதும் களைகட்டும் வெள்ளிக்கிழமை புதுப்பட ரிலீஸ் ஆர்பரிப்புகள் இந்தவாரமும் இல்லை. டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடையேயான பேச்சுவார்த்தை சமரசத்தை எட்டாதததை அடுத்து இந்த வாரம் புதிய படங்களின் ரிலீசுக்கு மட்டுமல்ல, தியேட்டர்கள், ஷூட்டிங்குகள், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என அனைத்துக்கும் சேர்த்தே ஸ்ட்ரைக் அறிவித்துள்ளன .அத்துடன், இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஏற்கெனவே அறிவித்தபடி புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தம் தொடரும் என்றும், திட்டமிட்டபடி 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில்…
Read More