நடிப்பு – தனுஷ், கிருத்தி சனோன்
இயக்கம் – ஆனந்த் எல். ராய்
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இந்தி படம்’தேரே இஷ்க் மே’. தமிழில் டப்பிங்குடன் வெளியாகியுள்ளது. ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கும் தனது காதல் மெட்டுக்களை போட்டு படத்தை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
கல்லூரியில் ரவுடிசம் பண்ணிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சங்கரை (தனுஷ்) மனிதர்களிடமிருந்து வயலென்ஸை முற்றிலுமாக நீக்க முடியும் என தனது பிஹெச்டி படிப்புக்காக சங்கரை பரிசோதனை எலியாக்குகிறார் முக்தி (கிருத்தி சனோன்). அழகான பெண்ணை பார்த்ததும் அராஜகமான இளைஞனுக்கு காதல் வந்து விடுகிறது. அவர் சொல்வதையெல்லாம் கேட்கிறார். கடைசியில், இன்னொருவரை கட்டிப் பிடித்துக் கொண்டு டாட்டா காட்டி கிளம்ப, மீண்டும் அசுரனாக தனுஷ் மாறுகிறார்.
ஐஏஎஸ் அதிகாரியின் மகள் நான் என்றும், சாதாரண 10க்கு 10 வீட்டில் இருப்பவன் நீ என்பதை சங்கருக்கு புரிய வைக்க வீட்டுக்கு வரவழைக்கிறார். அங்கே முக்தியின் அப்பா ஐஏஎஸ் படித்து பாஸ் செய்தால் என் மகளை கட்டி வைக்கிறேன் என்று கூறுகிறார்.ஐஏஎஸ் தேர்வில் தனுஷ் வெற்றி பெறுகிறாரா? கிருத்தி சனோன் காதல் கிடைக்கிறதா? தனுஷ் ஏன் விமானப்படையில் சேர்கிறார். அங்கே கிருத்தி சனோனுக்கு என்ன வேலை என்பது தான் படம்.

⭐ படத்தில் நன்றாக இருந்த விஷயங்கள்
தனுஷ் கிருத்தி சனோன் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இருவரும் தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களை நன்றாகவே பண்ணியிருக்கிறார்கள். தனுஷ் வழக்கமான பாத்திரத்தில் அசத்துகிறார்.
A.R. Rahman இசை படத்துக்கு பெரிய பலம். சில காட்சிகள் முழுக்க அவருடைய BGM-லேயே உயிர் வந்து நிற்கிறது. படம் தொங்கும் போதெல்லாம் அவர் தான் தாங்குகிறார்.
படம் தொடக்கத்தில் காலேஜ், காதல், கதாபாத்திரங்களின் background எல்லாமே கொஞ்சம் fresh-ஆ, கவனத்தை ஈர்க்கும் மாதிரி இருக்கிறது.
கதைக்கு ஒரு எமோசனல் டச் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கிறார்கள். சில காட்சிகளில் அது நன்றாக ஒர்க் ஆகியிருக்கிறது.
❗குறைகள்
லவ் + வயலன்ஸ் + ரிவெஞ்ச் + எமோஷன் என எல்லாததையும் ஒன்றாக கொடுக்க முயற்சி செய்து குழப்பி அடிக்கிறார்கள்.
First half ஓகேனு தோன்றினாலும், second half-ல கதை வேகமும் flavour-மும் மாறிடுது.
சில காட்சிகள் “இது எப்படி சாத்தியம்?”ன்னு தோணும் மாதிரி logic-கே இல்லாமல் இருக்கிறது.
முடிவு
Tere Ishk Mein ஒரு pure love story மாதிரி இல்லை.
நடிப்பு, இசை நல்லா இருக்கும்.
ஆனால் கதையின் ஓட்டமும், திரைக்கதையும் சரியாக இல்லாததால் படத்தின் உணர்வுகள் நமக்குள் முழுமையாக வரவில்லை.
எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்து விட்டுப் பார்த்தால் படம் ஓகே .
