JK. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், சூப்பர் சுப்புராயன், சுனில், ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’
பாண்டிச்சேரியில் வசித்து வரும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்) வீட்டில் அந்த ஏரியா ரவுடியான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) வந்து எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார். டிராகுலா பாண்டியனின் மகன் தனது அப்பாவை தேடி அலைவதும், அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டேன் என எதிரி கேங்ஸ்டர்களை எல்லாம் தேடிப் பிடித்து கொல்ல, தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற, ரிவால்வரை எடுத்து ரீட்டா என்ன செய்கிறார் என்பதை, டார்க் காமெடி ஜானரில் செம ஜாலியாக கொடுத்திருக்கும் படம் தான் இந்த ரிவால்வர் ரீட்டா.
படத்தின் நல்ல அம்சங்கள்
படத்தின் மொத்தக்கதையையும் கீர்த்தி சுரேஷ் தாங்கியிருக்கிறார். ராதிகா அட்டகாசம் கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். அவர் அடிக்கும் ஒன்லைன் எல்லாம் வெடிச்சிறப்பு வர வைக்கிறது.
படம் முழ்க்க ஏகப்பட்ட குட்டி கேரக்டர்கள் இயல்பாக செய்துள்ளார்கள்.
சில காட்சிகளில் வரும் டார்க் காமெடி நன்றாக வேலை செய்கிறது. சிரிக்கணுமா டென்ஷனா இருக்கணுமா தெரியாம இருக்கும் அந்த feeling-ஐ சரியாக பிடித்திருக்கிறார்கள்.
Visuals & music படத்துக்கு mood உருவாக்க நன்றாக உதவுகிறது.
படத்தின் குறைகள்
கதை புதுசு என்னும் அளவுக்கு பெரிய திருப்பமோ, சுவாரஸ்யமோ இல்லை. பல படங்களில் பார்த்த மாதிரி ஒரே பேட்டர்ன்.
முதல் பாதி பெரும் ஆர்வத்தை தூண்டி விட இரண்டாம் பாதி இலக்கே இல்லாமல் எங்கெங்கோ அலைகிறது.
சில காட்சிகளில் logic எதுவுமே இல்லை. ஆரம்பத்திலிருந்து சொல்லி வரும் கதாபாத்திரங்கள் ஏன் இப்படி முடிகிறது என்பதற்கு பதில் இல்லை.
டார்க் காமெடி + குடும்ப ட்ரமா + க்ரைம் + action — இதெல்லாத்தையும் mix பண்ண முயற்சி பண்ணியிருக்கிறார்கள். ஆனா அந்த tone எல்லா நேரத்திலும் ஒர்க் ஆகவில்லை.
மொத்தமாக என்ன சொல்லலாம்?
ரிவால்வர் ரீட்டா பொறுமையாக பார்த்தால் அங்கங்கே சிரித்து விட்டு வரலாம்.
