⭐ மாஸ்க் (2025) – விமர்சனம் !!

 

ஹீரோ யார்? வில்லன் யார்?
முகமூடி கழற்றினால் உண்மையில் அவர்கள் யார்?…
இந்த கேள்வியையே மையமாக கொண்டு போகும் ஒரு சுவாரஸ்யமான ‘டார்க் ஹெயிஸ்ட்-திரில்லர்’ தான் Mask.

கதை – முகமூடியின் பின்னால் இருக்கும் மனிதர்கள் தான் மையம்

சொந்தமாக டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பவர் வேலு (கவின்). வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அதே நேரத்தில் முடிந்தவரையில் அவர்களை தனது பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வாழ்கிறார். இன்னொரு பக்கம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை காப்பாற்றி படிக்க வைத்து ஆளாக்கும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் பூமி (ஆண்ட்ரியா). அதே நேரம் இவருக்கு வேறு ஒரு முகமும் இருக்கிறது.

இவர்கள் இருவரின் பாதைகளும் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தின் மூலம் குறுக்கிடுகின்றன. கொள்ளை போன பணத்தை எப்படியாவது மீட்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் இருவரும். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதா? கொள்ளைக்கு காரணம் யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘மாஸ்க்’

பணம், ஆசை, துரோகம்…
ஒவ்வொருவரும் ஒரு “முகமூடி” போட்டு வாழும் உலகத்தைக் காட்டுகிறது இந்தப்படம்.

மெதுவாக ஆரம்பிக்கும் கதை இடைவேளையின் போது நடக்கும் அந்த கொள்ளைக் காட்சி வரையுமே நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது திரைக்கதை. அந்த கொள்ளை சம்பவம், அதில் வந்து கவின் மாட்டிக் கொள்வது, அதன் பிறகு கவினின் காதலியின் வீட்டில் நடப்பவை என தொடர்ந்து ஒரு 20 நிமிடத்துக்கு எழுதப்பட்ட காட்சிகள் ரகளை.

இடைவேளைக்குப் பிறகு ஆண்ட்ரியா – கவின் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் ஆட்டமாக சென்றிருக்க வேண்டிய திரைக்கதை, எங்கெங்கோ அலைந்து திரிகிறது. இறுதிக்காட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

நடிப்பு
கவின்

சாதாரண ஹீரோ டெம்ப்ளேட்டில் இல்லாமல், நிழல்களோடு வாழும் ‘ நல்லவன் இல்லை கெட்டவனும் இல்லை எனும் கதாபாத்திரத்தை’ சிறப்பாக செய்திருக்கிறார்.
அவரின் சீரியஸ்-காமெடி கலந்த நடிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது.

ஆன்ட்ரியா

யாரும் செய்யத் தயங்கும் வில்லி பாத்திரத்தை துணிச்சலாக செய்துள்ளார். கவினை மிரட்டும் காட்சிகளில் கவர்கிறார்

பிற கதாபாத்திரங்கள்

பவன், சார்லி, ருஹானி சர்மா, ரமேஷ் திலக், கல்லூரி வினோ என அனைவருமே தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.

 


தொழில்நுட்பம்

எடிட்டிங் பயங்கர சொதப்பல், எந்த காட்சி எங்கே வர வேண்டும், எப்போது முடிய வேண்டும், என்று என எந்த இலக்கும் இல்லாமல் எடிட் செய்யப்பட்டிருக்கிறது.
கேமரா அடுத்த சொதப்பல், படம் எந்த டோனில் இருக்கிறது என அவர்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு டோனில், ஷார்ட் ஃபிலிம் வரும் ஃப்ரேமிங் ஸ்டைலில் இருக்கிறது. சினிமாவுக்கான ஒரு ஃப்ரேமிங் கூட இல்லை
இவன் என்னடா பேசிக்கிட்டு இருக்கும்போதே மியூசிக் போடுறான் என யோசிக்கும்போது தான், ஐயோ இது நம்ம ஜீவி பிரகாஷ்லனு நினைப்பு வருது. இதுக்கு இது போதும்னு நினைச்சிட்டாரோ என்னவோ ?

யாருய்யா அந்த சவுண்ட் மிக்ஸிங், கொடூரம் ஃபைனல் மிக்ஸ் பண்ணவங்க படத்தை சிதைச்சுட்டாங்க..
கவின் பேசிகிட்டு இருக்கும்போதே பின்னாடி நெல்சன் வாய்ஸ் ஓவர் வருது, அதத்தாண்டி ஜீவி மியூசிக் டமார் டமார்னு அடிக்குது, மூணு லேயர்ல ஒன்னு கூட ஒழுங்கா கேட்கல..

ஒரு நல்ல கதை எழுதி, அதற்கு கதைக்களம் பிடித்து, நல்ல கேரக்டரைசேசன் செய்து, அதற்கு தகுந்த நல்ல நடிகர்களைப் பிடித்து, நல்ல தயாரிப்பாளரும் பிடித்து,
இப்படி எல்லாம் பிடித்த பின்னால், அதை எல்லோரும் சேர்ந்து சொதப்பியிருக்கிறார்கள்..

⭐ முக்கிய பலம்

ஹீரோ–ஹீரோயின் ‘நல்லவர்கள்’ என்ற safe பாதையை தவிர்த்து, “everyone is grey” approach.

துரோகம் + பேராசை + double-cross களை வைத்து weave செய்த ஹெயிஸ்ட் screenplay.

ஆண்ட்ரியாவின் வித்தியாசமான villain performance.

மாஸ்க் ஒரு முறை பார்க்கலாம்

error: Content is protected !!