கசட தபற – விமர்சனம்!

0
243

கசட தபற_ சோனியில் ரீலிசான நல்ல படம். பெத்த பேரு உள்ள மன்னாருக எல்லாம் புண்ணாக்கு படம் போட்டு ஓடிடிய கேவலபடுத்தும் இந்த நேரத்தில் சிம்புதேவன் எடுத்த நல்ல படம் இது. ஆறு கதய லிங்க் பண்ணி அட்டகாசமான திரைக்கதையில் நல்ல நடிப்பு நல்ல இசை நல்ல ஒளிப்பதிவு என சிம்புதேவன் பந்தா பார்ட்டிகளுக்கு கொட்டு வைத்திருக்கிறார்.

ஆறு கதைய தனித்தனியாக ஆரம்பித்தாலும் அதில் லிங்க் வருவது தூள்டா என்று கை தட்ட வைக்கிறது. நெடுநாள் கழித்து சூப்பரான வசனங்கள். ஒவ்வொரு கேரக்டரும் அசால்ட்டாக மனச நெருடும்படி பேசி போகிறார்கள். உடல் மொழி ப்ப்ப்பா.. எல்லா நடிகர் நடிகைகளும் பக்காவாக மாறி பின்றாங்க. நெறய ட்விஸ்ட் ஆச்சரியம். பிரேம்ஜி ரெஜினா லவ்.. சம்பத் சாந்தனு பாசம் கவுப்பு.. சந்தீப் பேமிலி அவர் பிரண்ட், சுப்பு திருப்பம்.. ஹரிஷ் குரோர்பதி ப்ளான் முஸ்லிம் பேமிலி.. விஜய லட்சுமியின் நேர்மை, பையன், கிருஸ்தவ குடும்பம். கார்ப்பரேட் ட்ரீட்மென்டை குப்பற மிதிக்கும் டாக்டர் சங்கிலி முருகன். அப்பாவி வெங்கட் பிரபு அவரை சுற்றி மொள்ளமாரிகள்+ நல்ல உள்ளங்கள்..

கடசியில சாதாரண சனங்களுக்கும் நீதி கெடைக்குது. கதயில வர்ற யூகி சேது கிருஷ்ணர் நமக்கு சொல்றது_’ மொக்க பயலுக படத்த எதுலயும் பாக்காதீக. நல்ல படத்த என்கரேஜ் பண்ணுங்க’ என்பதே..

நன்றி சிம்புதேவன்.. ரொம்ப நாள் கழிச்சு மிக நல்ல படம் பாத்த உணர்வு..

மருதநாயகம்!