கமலுடன் மறுபடியுமா?.. ச்சீச்சீ.. அவர் பக்கமே திரும்ப மாட்டேன்! – கவுதமி

0
694

நடிகர் கமலுடன்தற்போது தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனவும், கமல் தமக்கு சம்பள பாக்கியை தரவில்லைஎனவும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசனுடன் 2005 முதல் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி, கடந்த 2016ம் ஆண்டு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

அதன் பின்னர் கமல்ஹாசனுடன் அவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், கவுதமி மீண்டும் கமலுடன் இணைந்துவிட்டார் என செய்திகள் பரவியது. இந்த நிலையில் கமலுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள கவுதமி, அவர் தனக்கு சம்பள பாக்கியும் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கவுதமி தனது வலைபக்கத்தில்  இது குறித்து , “நானும் கமல்ஹாசனும் இணைந்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்ததை கவனித்தேன். அது முற்றிலும் உண்மையில்லை. நானும் கமல்ஹாசனும் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிந்தோம். எனது மகளின் எதிர்காலம் கருதி அதற்கான நிதிநிலையைப் பெருக்குவது ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். அவருடன் இனி இணையப்போவது இல்லை.

எங்களுடைய 13 வருட வாழ்க்கையில் நான் உடை வடிவமைப்பாளராக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த படங்கள் மற்றும் பிற தயாரிப்பாளர் தயாரித்து கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு மட்டுமே வேலை செய்துள்ளேன். மற்ற படங்களுக்கு வேலை செய்வதற்குத் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தேன். மேலும், எனக்கு தசாவதாரம் மற்றும் விஸ்வரூபம் ஆகிய படங்களில் இருந்து தொடர்ச்சியாக நான் வேலை பார்த்த படங்களுக்குச் சம்பளப் பாக்கியிருக்கிறது.

எனக்கு இருக்கும் ஒரே வாழ்வாதாரம் நான் வேலை செய்து கிடைக்கும் ஊதியம்தான். எங்கள் பிரிவுக்கு கமல்ஹாசன் மகள்களான ஸ்ருதி மற்றும் அக்ஷராவுக்கும் சம்பந்தம் இல்லை. கமல்ஹாசனுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையிலும், சினிமா மற்றும் அரசியல் ரீதியிலும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.