தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!-

0
457

தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் விருதுகளுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளி யிட்டது. 2008ம் ஆண்டிற்கு பிறகு தமிழ் திரைப்படத்திற்கான விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கடந்த 5 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துளளது. அதன் படி..

2009-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக பசங்க படத்திற்கு முதல் பரிசு அறிவித்துள்ளது.

மேலும் 2010-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மைனா

2011-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் வாகை சூட வா

2012-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் வழக்கு எண் 18/9

2013- ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் ராமானுஜர்

2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் குற்றம் கடிதல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் விருது

2009- கரண்,
2010-விக்ரம்,
2011-விமல்,
2012-ஜீவா,
2013-ஆர்யா,
2014 சித்தார்த், ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த நடிகை விருது

2009- பத்மபிரியா,
2010- அமலாபால்,
2011- இனியா,
2012 லட்சுமி மேனன்,
2013- நஸ்ரியா,
2014- ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறந்த நடிகைகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த இயக்குனர் விருது அறிவிப்பு

2009- வசந்தபாலன் (அங்காடித்தெரு)
2010 – பிரபுசாலமன் (மைனா);
2011 – ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
2012 – பாலாஜிசக்திவேல் (வழக்கு எண் 18/9);
2013 ராம் (தங்கமீன்கள்);
2014- ராகவன் (மஞ்சப்பை) ஆகியோர் சிறந்த இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த இசையமைபாளருக்கான விருது

2009 – சுந்தர் சி.பாபு;
2010- யுவன் சங்கர் ராஜா;
2011 – ஹாரீஸ் ஜெயராஜ்;
2012-இமான்;
2013-ரமேஷ்வினாயகம்;
2014- ஆண்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த பாடலாசிரியர் விருது

2009 – யுகபாரதி (பசங்க)
2010 – பிறைசூடன் (நீயும் நானும்)
2011 – முத்துலிங்கம் (மேதை)
2012- நா. முத்துக்குமார் (பல படங்கள்)
2013 – நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
2014 – நா. முத்துக்குமார் (சைவம்)

 

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது

2009- கஞ்சா கருப்பு,
2010- தம்பிராமையா,
2011- மனோபாலா,
2012- சூரி,
2013- சத்யன்,
2014- சிங்கமுத்து ஆகியோர் சிறந்த நகைச்சுவை நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.