ரஜினி-யின் 2.0 திரைப்பட டி.வி. ரைட்ஸ் ரூ 110 கோடி மட்டுமே?!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 450 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பது உறுதியான தகவல். அதேசமயம் ஆசிய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவான படங்களில் இதுவும் ஒன்றாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90% நிறைவடைந்துள்ளதாம். இதை ஷங்கரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாடல் மற்றும் பேட்ச் வர்க் மட்டுமே மீதியுள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் ரூ. 110 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து இந்த டீலை முடித்திருக்கிறதாம்.இந்த தகவலை தயாரிப்பு நிர்வாகி ராஜூ மகாலிங்கமும் உறுதிப்படுத்தி உள்ளார்