ரஜினி படத்தில் பன்ச் பேசுவார் தெரியும். நிஜத்திலும் பன்ச் பேசியிருக்கிறார். அவர் பேசிய சில பன்ச்களை பார்ப்போம்.
”சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரைபோயிருந்தப்ப, மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள்என்கிட்ட, ‘உங்க நட்சத்திரம் என்ன?’னு கேட்டப்ப, ‘தெரியாது சாமி’னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள் எனக்கு ‘சூப்பர் ஸ்டார்’னு ஒரு நட்சத்திரத்தைக்கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்!
”நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோலஎனக்கு ஆஞ்சநேயரா இருந்த நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!”
”சம்மர் வந்துட்டா, ‘போன வருஷத்தோட இந்தவருஷம் வெயில் ஜாஸ்தி’னு எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்குஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு. அதனால உடம்பு அந்த அனலைத் தாங்கமுடியலைங்கிறதை மறந்துடு றாங்க!”
” ‘நான் யார்?’னு தெரிஞ்சுக்க எனக்குத் தனிமைதேவைப்படுது. அதனால இமயமலை போறேன். அது ரிஷிகள், முனிகள்தவம் செஞ்ச / செய்ற புண்ணிய பூமி. அங்கே ‘நான் யார்?’னு என்னைச் சுலபமாக்கண்டுபிடிக்கிற வாய்ப்பு அதிகம். அதான் அடிக்கடி போறேன்!”
‘ ‘பாபா’ படப்பெட்டிகளை அபகரித்து தகராறு செய்தஒரு கட்சியைக் கண்டிச்சு கண்ணியமா கறுப்புக்கொடி காட்டினார்கள் என்ரசிகர்கள். அவங்களை அந்தக் கட்சிக்காரங்க அடிச்சிருக்காங்க. நான்அவங்களைப் பார்த்துக் கேட்கிறேன், ‘மதுரையில இருக்குற ரசிகர்களை அடிக்கிறீங்க. சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா… என எல்லா நாட்லயும் ரசிகர்கள்கறுப்புக்கொடி காட்டுவாங்க. அப்போ என்ன செய்வீங்க?’ ”
”யானை, கீழே விழுந்தா… அதால சீக்கிரம்எந்திரிக்க முடியாது. ஆனா, குதிரை விழுந்தா டப்புனு எந்திரிச்சு முன்னைவிடவேகமா ஓடும். நான் குதிரை. சட்னு எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருப்பேன்!”
”சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலைஅழித்துக்காட்டிய முதல்வர் ஜெயலலிதாவை, ‘பராசக்தியின் மறு உருவமாகப்பார்க்கிறேன்’!”
‘நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?’ என்ற கேள்வியை ரஜினியிடம் எப்போது கேட்டாலும், ”இல்லை. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கேன். ஆரம்பத்தில், இந்தஅந்தஸ்தை அடையப் போராடினேன்.