தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணையுமாம்!

தனுஷ் நடித்த ‘3‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.குறிப்பாக

தனுஷ், அனிருத் கூட்டணி கொலவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் என்ற நிலை இருந்தது..

‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவுடன் சேர்ந்து அனிருத் இசையமைக்கும் பீப் பாடல் மூலம் அனிருத்துக்கும் தனுஷ்க்கும் இடயிலான பிரிவு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்து நடித்த கொடி, பவர் பாண்டி படம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு ஷா ரோல்டன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்து இவர்கள் பிரிவு நிரந்தரம் என்றே தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், தாங்கள் பிரிந்தது தற்காலிகம்தான். நான் மீண்டும் தனுஷ் படத்துக்கு இசைய மைப்பேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஒரு இசையமைப்பாளர் ஒரே நடிகரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தால், ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி விடும். அதை தவிர்ப்பதற்காகவே நானும், தனுஷும் சின்ன இடைவெளி ஏற்படுத்திக் கொண்டோம். மீண்டும் நாங்கள் இணைந்து பணிபுரிவோம் என்றார்.