ஜாக்கிசான் சவாரி செஞ்ச சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்!

ஜாக்கிசான் நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘போலீஸ் ஸ்டோரி 3, 4, ரம்புள் இன் தி பாக்ஸ், தி மித்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்டானி டோங் ‘குங்பூ யோகா’ படத்தை இயக்குகிறார். சீன, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் தமிழில் வெளியாகப் போகிறது.

இந்தப் படத்தின் பல முக்கியக் காட்சிகள் ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக இந்த வாரத் துவக்கத்தில் மும்பைக்கு வந்திருந்தார் ஜாக்கிசான். இந்தியாவிலும் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு, ஜாக்கி சான் படங்களுக்கென்று கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

‘கராத்தே கிட்’ படத்திற்குப் பிறகு வெளிவந்த ஜாக்கிசானின் படங்கள் இங்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்த குறையை ‘குங்பூ யோகா’ போக்குமா என்பது அடுத்த வாரம் தெரியும்.

இதனிடையே ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் சவாரி செய்த சைக்கிள் சுமார் 10 லட்சத்துக்கு ஏலத்தில் சென்றுள்ளது.குங்பூ யோகா படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக இந்தியா வந்துள்ளார். இவர் கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று புரமோஷன் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். வந்த இடத்தில் இதேத படத்தில் தன்னிடன் நடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் -டுடன் ஒரு சைக்கிளில் டபுள்ஸ் அடித்தார்கள்.இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே, அந்த சைக்கிள் ஏலம் விடப்பட்டது. இதை ஜாக்கி சான் ரசிகர் ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.