ஹாலிவுட்

‘த லயன் கிங்’ – ஜூலை 19ல் ரிலீஸ்!

‘த லயன் கிங்’ – ஜூலை 19ல் ரிலீஸ்!

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படமான ‘த லயன் கிங்’ வரும் ஜூலை 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னியின் த லயன் கிங் திரைப்படம் கார்ட்டூன் அனிமேஷனில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமானது. தான் வாழும் பரந்த நிலப்பரப்பை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் .ராஜா சிங்கம் முபாசா. அவரை வீழ்த்தி தான் ராஜாவாக திட்டம் தீட்டி வருகிறார் அவரது தம்பி சிங்கம் ஸ்கார். இந்நிலையில் முபாசாவுக்கு அழகிய ஆண்குழந்தையாக குட்டிசிங்கம் சிம்பா பிறக்கிறான். அவனை அடுத்த ராஜாவாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் முபாசாவை கொன்று குட்டி சிம்பாவை துரத்திவிட்டு தான் ராஜாவாகி கொடூர ஆட்சி செய்கிறான் ஸ்கார். இதையடுத்து சிம்பா பெரியவனாக வளர்ந்து தனது தந்தையின் காட்டை ஸ்காரிடமிருந்து, எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை. ஒரு சிறந்த தந்தை மகன் உறவுக்கான க
பிர்சா முண்டாவின் வாழ்க்கையை ஹிந்தியில் எடுக்க ஆயத்தமாகும் பா. இரஞ்சித்!

பிர்சா முண்டாவின் வாழ்க்கையை ஹிந்தியில் எடுக்க ஆயத்தமாகும் பா. இரஞ்சித்!

“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்ட மாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள், ஜமீன்தார்கள் ஆகிய இருதரப்பிடமும் தங்கள் பாரம்பரிய நிலத்தை இழந்து, அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களை மீட்பதற்காகப் சிறுவயது முதலே போராடியவர் பிர்சா முண்டா. 1890களில் பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை 1894 அக்டோபர் 1ஆம் தேதி பிர்சா முண்டா நடத்தினார். தங்கள் போராட்டக்குரல் அதிகாரவர்க்கத்தால் அலட்சியப்படுத்தப்பட்ட
ஆஸ்கார் விருது நிகழ்வு நேரம்  மற்றும் பட்டியலில் மாற்றம்!

ஆஸ்கார் விருது நிகழ்வு நேரம் மற்றும் பட்டியலில் மாற்றம்!

ஆஸ்கார் விருது நிகழ்வு நேரம்  மற்றும் பட்டியலில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக  மோஷன் பிக்சர்ஸ்  அமைப்பு தெரிவித்துள்ளது. திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆஸ்கார் விருது பட்டியலிலும், ஆஸ்கார் நிகழ்ச்சியிலும் சிறிதளவு மாற்றம் செய்யப்படவுள்ளதாக The Academy of Motion Picture Arts and Sciences’ board -ன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய மாற்றத்தின்படி பெண்களுக்கு மற்றும் சிறுபான்மையினருக்கு முக்கியதுவம் அளிக்கும் என்றும் பிரபல படங்களில் சிறந்த புதிய சாதனைகள் அடையாளப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்கார் தரப்பில், "ஆஸ்கர் விருது வழங்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று நிறைய பேர் கூறியதை நாங்கள்
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்தவர்?

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்தவர்?

சர்வதேச சினிமா ரசிகர்களைக் கவர்ந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்தவர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளி யாகி யுள்ளது.சினிமா ரசிகர்களிடத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு எப்போதும் வரவேற்பு உண்டு. ஜேம்ஸ் பாண்ட் 007 ஒரு பிரிட்டீஷ் உளவாளி கதாபாத்திரம். இதில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த இட்ரிஸ் எல்பா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என காலத்திற்கு ஏற்ப பிரபலமாக இருந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். கடந்த 4 ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். இந்நிலையில் 25வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'ஸ்லம்டாக்
நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ் கேன்ஸ் விழாவில் பங்கேறபு!

நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ் கேன்ஸ் விழாவில் பங்கேறபு!

கோலிவுட்டில் நடிக்கத் தொடங்கி, பாலிவுட் போய் அங்கிருந்து ஹாலிவுட்-டுக்கும் போய் விட்ட  நவீன நவரச நாயகன் நடிகர் தனுஷ்  ஃபகிர்’ படத்தின் புரொமோஷனுக்கான உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில்  பங்கேற்கவுள்ளார். பிரான்ஸ் நாட்டில் நாடைபெறும் உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் திரைப்படமான ‘தி எக்ட்ரார்டினர்ய் ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ திரையிடப்படவுள்ளது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் டிராப்டு இன் அன் ஐக் வார்ட்ரோப்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷூடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் உலகம் முழுவதும் வரும் மே.30ம் தேதி ‘தி ஃபகிர்’ திரைப்படம
ஆஸ்கார் விருதை தொலைத்து விட்டு மறுபடியும் பெற்ற சிறந்த நடிகை!

ஆஸ்கார் விருதை தொலைத்து விட்டு மறுபடியும் பெற்ற சிறந்த நடிகை!

ஆஸ்கர் விருது விழாவுக்குப் பிறகு நடைபெற்ற பார்ட்டியின்போது, சிறந்த நடிகைக்கான விருதுபெற்ற பிரான்சிஸ் மெக்டார்மண்ட் தனது ஆஸ்கர் சிலையைத் தொலைத்துவிட்டார். இதனால் ஹாலிவுட்டின் கவர்னர் பால் அறையில் நடைபெற்ற பார்ட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. Three Billboards Outside Ebbing, Missouri திரைப்படத்தில் நடித்த மெக்டார்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. விருது விழா முடிந்த பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று மெக்டார்மண்டின் விருது காணாமல் போனதாக செய்தி பரவத் தொடங்கியது. எவ்வளவு தேடியும் விருது கிடைக்காததால், பார்ட்டியிலிருந்து மெக்டார்மண்ட் கிளம்பிவிட்டார். ஆனால், அவர் கிளம்பிய சில நிமிடங்களில் ஆஸ்கர் நிகழ்ச்சியைப் படம்பிடிக்க வந்திருந்த ஃபோட்டோகிராஃபர் மெக்டார்மண்டின் விருதை ஆஸ்கர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
நடிகை ஸ்ரீதேவி  மாரடைப்பால் மரணம்! தலைவர்கள் & திரைபிரமுகர்கள் அஞ்சலி

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்! தலைவர்கள் & திரைபிரமுகர்கள் அஞ்சலி

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்ட போது நேற்றிரவு (பிப்ரவரி 24) திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி ஆகியோருடன் தனது உறவினரும் திரைப்பட நடிகருமான மோஹித் வர்மாவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ளார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். (துபாய் திருமண நிகழ்வில் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம்) தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரைத் துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருகக் கடவுள் க
ஜேம்ஸ் பாண்டுக்கு கல்யாணம்!- ஹாலிவுட்  கிசுகிசு

ஜேம்ஸ் பாண்டுக்கு கல்யாணம்!- ஹாலிவுட் கிசுகிசு

ஜேம்ஸ் பாண்ட பட வரிசையில் 25-வது படமாக உருவாகும் 'பாண்ட்25' படத்தில் தனது காதலியை திருமணம் செய்துகொள்வது போல் பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஹாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆக்‌ஷன், ரொமான்ஸ், திரில்லர், லேட்டஸ்ட் டெக்னாலஜி என அனைத்து அம்சங்களும் கலந்து ஹாலிவுட் ஜனரஞ்சக படமாக ஜேம்ஸ் பாண்ட் அமைந்து இருக்கும். அந்த வகையில் பாண்ட் வரிசைப் படங்களில் 25-வது படம் விரைவில் உருவாக உள்ளது. இதில் தற்போதைய ஜேம்ஸ் பாண்டாக திகழும் நடிகர் டேனியல் கிரேக், பாண்டாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் படத்தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து நாள்தோறும் புதிய பாண்ட் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தப் புதிய படத்தின் கதையானது, முந்தைய பாண்ட் படம் 'ஸ்பெக்ட்ரே'-இன் தொடர்ச்சியாக குரோட்ஷியா நாட்டில் நடக்கு
சிங்கிளா இருப்பது ரொம்ப கஷ்டம்!- ஏஞ்சலினா பீலிங்!

சிங்கிளா இருப்பது ரொம்ப கஷ்டம்!- ஏஞ்சலினா பீலிங்!

ஏஞ்சலினா தன் கணவரும் நடிகருமான பிராட் பிட்டுடனான உறவை முறித்துக்கொள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக விண்ணப்பித்திருந்தார். விவாகரத்திற்கு முன்பு ஒரு வருடம் கணவன் மனைவி பிரிந்து வாழவேண்டுமென்பதால், நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை ஒரு வருட காலமாக தன் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். இந்நிலையில், பிராட் பிட் புதிய படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார். இதனிடையே பிராட் பிட்டுடனான பிரிவுக்கு பிறகு சிங்கிளாக வாழ்வதால் வாழ்க்கை கடினமாக இருப்பதாக ஜோலி கூறியிருக்கிறார். இது குறித்து அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “சிங்களாக இருப்பது மகிழ்ச்சியாக இல்லை. இது போன்று என் வாழ்க்கை அமைய விரும்பவில்லை. மிகவும் கடினமாக நாட்கள் செல்கின்றன. 12 ஆண்டுகால உறவை பிரிந்தது உணர்வுப்பூர்வமாக உள்ளது.கடினமாக ஒ
ராணாவின் ஹாலிவுட் கமிட்மெண்ட்!

ராணாவின் ஹாலிவுட் கமிட்மெண்ட்!

பாகுபலி ரிலீசுக்குப் பிறகு ராணா நடிப்பில் ’நேனே ராஜு, நேனே மந்திரி’ படம் ரிலீசாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர் படமான இதில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார். தேஜா இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 11ம்தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கான ப்ரமோசன் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் ராணா. அத்துடன் தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராணா, LDM எனப்படும் The London Digital Movie & TV Studios உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கும் அரசியல்வாதி கதாபாத்திரத்தை போல் ராணா நடித்துள்ள `நானே ராஜு நானே மந்த்ரி' ஏற்கனவே அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு ள்ளது. அதன்தொடர்ச்சியாக அவர் `மடை திறந்து' மற்றும் `என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது அவர் லண்டனைச் சேர்ந்த