ஸ்கிரீன்

அமேஸான் பிரைம் வீடியோ-வின்  முதல் தமிழ் பிரைம் தொடர் – “வெள்ள ராஜா”!

அமேஸான் பிரைம் வீடியோ-வின் முதல் தமிழ் பிரைம் தொடர் – “வெள்ள ராஜா”!

சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ ஆகிய படங்களைத் தயாரித்த ட்ரீம் வேரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெப் சீரியஸ் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் ‘வெள்ள ராஜா’ என்ற வெப் சீரியஸை தயாரித்து உள்ளார்கள். இந்த வெப் சீரியஸில் உலக அளவில் புகழ் பெற்ற வீடியோ நிறுவனமான அமேஸான் பிரைம் வீடியோவில் வரும் டிசம்பர் 7-ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த வெப் சீரியஸில் நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை பார்வதி நாயரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் குகன் சென்னியப்பன் இந்தத் தொடரை இயக்கி இருக்கிறார். இத்தொடர் போதை மருந்து கடத்தலை கதைக் கருவாகக் கொண்டது. வட சென்னையின் மையத்தில்  அமைந்திருக்கும்  பிரபலமான  தங்கும் விடுதி  ‘பாவா  லாட்ஜ்’.  இந்த விடுதிதான் போத
குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீக்கடை சினிமா ‘விருது வழங்கும்  விழா

குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீக்கடை சினிமா ‘விருது வழங்கும் விழா

சென்னை கோடம்பாக்கம் , வடபழனி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துபவர்களின் பேசுபொருள் அரசியலை விட சினிமாவே அதிகமாக இருக்கும் . ஒவ்வொரு டீக்கடையிலும் எதிர்காலக் கனவுகளுடன் எத்தனையோ இளைஞர்கள் இன்றும் கூடி சினிமா பற்றிப் பேசுகிறார்கள் ; கனவுகளைப் பகிர்கிறார்கள் .. ஆனால் இப்படிப்பட்ட இளை ஞர்கள் டீக்கடையோடு பேசிக் கலைந்து சென்று விடக் கூடாது. அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்ட வேண்டும் என்று கவலைப்பட்டு உதயமானதுதான்  ' டீக்கடை சினிமா  ' அமைப்பு . இதன் தொடக்கப் புள்ளியை உதயகுமார் போட , கிருபாகரன் , நிஷாந்த் ,விவேக் ஆகியோரும் இணைந்து கை கொடுக்கவே அது நால்வர் அணியாக உருவாகியிருக்கிறது.  இவர்கள் இம்முயற்சியை முன்னெடுக்கவே இப்போது 'டீக்கடை சினிமா ' திரைக்கனவு  சுமந்த 1000 பேர் கொண்ட அமைப்பாக மாறியிருக்கிறது  . "கைதட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே "என்கிற உணர்வோடு சக