ரிவியூ

தர்ம பிரபு – விமர்சனம்!

தர்ம பிரபு – விமர்சனம்!

கோலிவுட்டோ அல்லது ஹாலிவுட்டோ காதல், ஆக்சன், பேமிலி செண்டிமெண்ட் சினிமா எடுப்பதில் வல்லவர்கள் எக்கச்சக்கமானோர் உண்டு. ஆனால்,அந்த மாதிரி சுவையான முழுமை யான காமெடி படம் எடுக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  காமெடி படம் என்றால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக வேண்டும். அந்த வகையில் நம் தமிழ் சினிமா வில் நகைச் சுவைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதிலும் இந்திய மொழிகளில் எல்லா தரப்பினருக்கும் சவால் விடும் வகையில் கலைவாணர் தொடங்கி தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் என்று அறுபடாத சங்கிலி தொடரில் தேங்காய், சுருளி, கவுண்டமணி – செந்தில், விவேக், வடிவேலு என்று போய் கொண்டிருந்தது அந்த வீரியம். ஆனால் அந்த நகைச்சுவை இப்போது நீர்த்து போய் விட்டது என்றே இப்போதைய தமிழ் சினிமாக்களைப் பார்க்கும் போது சொல்ல தோன்றுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் – அதாவது நடிப்பு என்றால் என்னவென்றாலே தெரிய
கொலைகாரன் – விமர்சனம்!

கொலைகாரன் – விமர்சனம்!

இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியவில்லை என்றே சொல்லலாம். இப்போது உள்ளங்கைக்குள் வந்துவிட்டது உலகம்; அதை சாத்தியமாக்கியிருக்கிறது ஸ்மார்ட்போன்… மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக் அப்டேட்ஸ் பார்க்கிறோம், வாட்ஸ்அப்பில் வரும் குறுந்தகவல்களை வாசிக்கிறோம், செய்தித் தாளில் தலைப்புச் செய்திகளை லேசாக நோட்டமிடுகிறோம்… ஆனால், முழுமையாக ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது எல்லோராலும் முடியாத காரியமாகவே இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் இணைய தேடல்களுக்குள் சிக்கி, பொழுதைக் கழிக்கிறோம். சுருக்கமாகச் சொல்வதானால் நேரத்தை விரயம் செய்கிறோம். அவ்வளவுதான். ஆனால் 1980களில் தமிழகத்தில் வாசிப்பு பழக்கம் என்பது சுனாமி அலையாய் வியாபித்தது என்று சொன்னால் மிகையல்ல.. அந்த காலக் கட்டத்தில் ஏகப்பட்ட துப்பறியும் நாவல்கள் கைக்குக் கிடைக்கும்.. அவைகளைப் படித்து வி
வெள்ளைப்பூக்கள் விமர்சனம்!

வெள்ளைப்பூக்கள் விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க விரும்பி ஓரிரு படங்களில் நடிப்பது தப்பில்லை. ஆனால் வடிவேலு மற்றும் சந்தானம் மாதிரி நடித்தால் நாயகன்தான் என்று அடம் பிடிக்கும் போது இந்த திரையுலகம் அவர்களை கறிவேப்பிலை மாதிரி தூக்கி போட்டு விடுகிறது. இதை முன்னரே அறிந்திருந்ததால்தான் விவேக் என்னும் சிரிப்பு நடிகன் தன்னைத் தேடி வரும் சகல ரோலையும் ஒப்புக் கொண்டு காமெடியனாகவும் நடித்த படி இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்க வாழ் இளைஞர்கள் தயாரித்த ஒரு படத்தில் ஹீரோ ரேஞ்சிலான ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். அந்த படம்தான் வெள்ளைப் பூக்கள். அது சரி.. படத்தின் கதை என்ன? சென்னையில் துப்பறியும் சாம்பு மாதிரி இருந்தவர் ரிட்டய்ர்ட் ஆன நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள தன் மகன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு தான் வசிக்கும் பகுதியிலேயே அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கும் மர்மமான கடத்தல் கொலைகள
மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்!

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வருவதுதான் அது., அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுக்கு அந்நியப்பட்டு நிற்பதுதான் அது.. ஆனாலும் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல நம் மனதிற்குள் வந்துதித்து , வியாபித்து, ஒட்டு மொத்த உடம்பிலும் சம்மணமிட்டு உட்கார்ந்துக் கொண்டு, அவனின் அல்லது அவளின் வாழ்க்கைச் சூழலை சின்னாப்பின்னமாக்குவதில் முக்கியமான பங்கு வகிப்பது இதுதான்.. அதுதான் காதல். இந்தக் காதல் என்பது இளமையின் வசந்த காலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக் கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டும் ஹார்மோன்கள் என்றெல்லாம் காமராஜ் என்ற பெயர் கொண்ட காம மருத்துவர்கள் சொல்லி பிழைப்பு நடத்துவது ஒரு பக்கம். கூடவே இந்த காதல் என்ற மூன்றெழுத்து மந்திரம் மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங் களை சேகரித்தே ஆயிரம் ஆயிரம்
‘ராக்கி’ – விமர்சனம்!

‘ராக்கி’ – விமர்சனம்!

உங்களுக்கு நாய் பிடிக்குமா? அதிலும் தமிழ் சினிமா நாயகன் மாதிரி சாகசம் செய்யும் நாய்களைப் பிடிக்குமா? ஆம் எனில் ஒரு எட்டு போய் திரையரங்கில் ராக்கி படத்தைப் பாருங்கள்..ஒரு நாய் தனது எஜமான் மீது வைத்துள்ள கட்டற்ற அன்பையும், அந்த எஜமானையே இழந்த நாய் பதறிப் போய் செய்யும் அதிரடி வீர தீர சாகசமும் தான் ராக்கி படக் கதை. இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும். ஆனால் அப்படி குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டை நாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்த
சூப்பர் டீலக்ஸ் – ரிவியூ – ஹைடெக்கான கழிவறை வாகனம்!

சூப்பர் டீலக்ஸ் – ரிவியூ – ஹைடெக்கான கழிவறை வாகனம்!

பாயிண்ட் நம்பர் 1 கள்ளக் காதல் – இந்த வார்த்தை அன்றாடம் நாளிதழில் இடம் பெறும் சமாச்சாரம்தான். இந்த கள்ளக் காதலால் கொலை அல்லது தற்கொலை நடந்தது என்ற செய்தியும் இத்துடன் இணைந்தே வருவதையும் கவனிக்கலாம்.. பாயிண்ட் நம்பர் 2 உலகளவில் போர்னோ எனப்படும் பலான படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் பல ட்ரிபிள் எக்ஸ் ஆல்பங்களில் தொடக்கத்தில் எச்சரிக்கை.. இதில் உங்களுக்கு அறிமுகமானவர் படம் கூட இருக்கலாம் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதையும் கவனிக்கலாம். பாயிண்ட் நம்பர் 3 நம் நாட்டில் வாழுவோரின் மதம் என்பது அவரவர் தனிப்பட்ட எண்ணமும், உரிமையும் ஆகும்.. அதே சமயம் தான் சார்ந்த மதத்தை உயர்த்தி பிற மதத்தை இழிவுப் படுத்த சட்டம் கூட அனுமதிக்க வில்லை என்பது கவனிக்கலாம். பாயிண்ட் நம்பர் 4 மனித குலத் தோன்றலின் போதே ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் வாழ்ந்து வரும் ம
அக்னி தேவி – விமர்சனம்!

அக்னி தேவி – விமர்சனம்!

சில சினிமாக்களில் கதையே இருக்காது.. சில சினிமாக்களில் சொல்லும் கதை புரியாது, சில சினிமாக்களில் நமக்கு தெரிந்த கதையை சொல்லி இருப்பார்கள் இல்லையா? அந்த டைப்பிலான கதை கொண்ட படம்தான் , ‘அக்னிதேவி’. நம்மில் பலரும் மறக்க முடியாத நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை., கருப்பு பணம், மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு, கண்டெய்னர் விவகாரம், நேர்மையான போலீஸ் ஆபீசர் (பொன்.மாணிக்கவேல்?)., அடாவடி அமைச்சர் (சசிகலா?) ஆகியோரை மனதில் கொண்டு பின்னி பிசையப் பட்ட கதைதான் இது. அதாவது நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இவரின் காதலி ஒரு நியூஸ் ரீடர் (ரம்யா நம்பீசன்) வற்புறுத்தலின் பேரில் ஒரு எக்ஸ்குளூசிவ் இண்டர்வியூ எடுக்க வரும் லேடி நிருபர், பஸ் ஸ்டாண்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதோடு, அவரது அண்ணனும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை நேரடியாக பாபி சிம்ஹா விசாரிக்க, அவருக்கு மேலதி
ஜூலைகாற்றில் விமர்சனம்!

ஜூலைகாற்றில் விமர்சனம்!

மனித வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஓர் அர்த்தம் உள்ளது. அதன் விளைவால் இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கி இருக்கிறார். “நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, “எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்போகிறேன்” என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள் அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்? ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான். “நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.” “உங்களைப் போல ந
நெடுநல் வாடை விமர்சனம்!

நெடுநல் வாடை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் கதைக்கு மட்டுமின்றி தலைப்புக்கும் பஞ்சம் வந்து ரொம்ப நாளாகிறது. அதனால் தான் முன்னொருக் காலத்தில் ஹிட் அடித்த படங்களின் பெயரை மறுபடியும் உபயோகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புது முயற்சியாக தூய தமிழில் அதுவும் பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடை என்னும் தலைபில் ஒரு படம் வந்துள்ளது. அதுவும் நெல்லையின் மண் மனம், மணம், குணம், நிறம், காரம், இனிப்பு, புளிப்பு என்ற பல்வேறு சுவைகளை கொஞ்சம் கூட மா(ற்)றாமல் ஒரு சினிமாவாகக் கொடுத்துள்ளார்கள். படத்துக்குள் நுழைவதற்கு முன் சில தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. இந்த நெடுநல் வாடை-யைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார். இப்பாடலானது பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுவதாக உள்ளது. அதில் கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்ற தலைவனை எதிர்பார்த்து அவன் வராததால் தனிமைத் துயரில் த
பூமராங் – திரைப்பட விமர்சனம்!

பூமராங் – திரைப்பட விமர்சனம்!

சினிமாக்களில் எக்கச்சக்கமான வெரைட்டி உண்டு.. அந்த கால படங்களை விடுங்கள்.., இன்றைய சூழ்நிலையில் காதல் படம், குடும்பப் படம், பேய் படம்,சிரிப்புப் படம், அடல்ட் படம், யூத் படம் என்ற வரிசையில் யூஸ்ஃபுல் மெசெஜ் சொல்லும் சினிமா என்றொரு வகை உண்டு. அது என்ன என்று தெரிந்து கொள்ள இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத் தில் அதர்வா, மேகா ஆகாஷ், RJ பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பூமராங் படத்தைப் பாருங்கள்.  உண்மைதான் இன்னொரு உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ள தண்ணீர் பிரச்னைக் குறித்து இன்றைய இளைஞர் களும் ரசிக்கும் விதத்தில் படமாகி இருக்கிறது பூமராங். அதாவது நாட்டில் ஆங்காங்கே உள்ள நதிகளை இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் இடங்களாக மாற்றலாம் என்ற கருத்து நீண்டகாலமாக ஏட்டளவில் (இணைய அளவில் என்றும் கொள்ளலாம்) அலசப்பட்டும் விஷயம்தான், ஆனால் இந்த நதி நீர் இணைப்பிற்காக அரசாங்கம் கொஞ்சம் கூடஎதுவும்