சினிமா -நேற்று

பாரதிராஜாவின் 16 வயதினிலே பட அனுபவம்!

பாரதிராஜாவின் 16 வயதினிலே பட அனுபவம்!

16 வயதினிலே படம் ரிலீஸாகி 43 வருசமாச்சாம் இதையொட்டி பாரதிராஜா-வுக்கு வாழ்த்து சொல்லி விட்டு அப்படத்தின் அனுபவம் குறித்து விசாரித்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி இதோ: “என்னுடைய கிராமத்து வாழ்க்கையிலே நான் சந்திச்ச சிலபல அனுபவங்களை ஒட்டி உருவான கதைக்கு பேர் ‘மயிலு. ஒரு கிராமத்து மனுஷியின் ஏக்கத்தைச் சொல்கிற திரைக்கதையைத் தயார் செய்து, பிலிம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு அப்போது அனுப்பினேன். பல சினிமா முக்கியஸ்தர்கள் கதைத் தேர்வுக் குழுவில் இருந்தும்கூட என்னுடைய திரைக்கதை ஏற்கப்படலை. இவ்வளவுக்கும், ‘16 வயதினிலே’ படத்தின் வடிவத்திலிருந்து மாறுபட்ட திரைக்கதை அது. முழுக்க வறட்சியான காட்டுப் பிரதேசம். அந்த வாழ்க்கை. அந்த ஏக்கம். இடைவேளைக்குப் பிறகு மயிலு பேசுவது ஒரேயொரு வசனம்தான். இப்படித்தானிருந்துச்சு என்னுடைய திரைக்கதை. நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருஷங்கள்
குரல் வசிய தேவதை ஸ்வர்ணலதா!

குரல் வசிய தேவதை ஸ்வர்ணலதா!

🎬பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவுநாள் இன்று. 😢 அதையொட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் நினைவஞ்சலி ரிப்போர்ட் தனித்துவமான குரல் வளத்தை பெற்ற பாடகி ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், யாரிந்த பாடலை பாடியது -ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகி விட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. அட்டே இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவே தான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். ஸ்வர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்குதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் அப்படீன்னு பல பேரும் பேசத் தொடங்கினார்கள். ரிலீஸாகும் அம்புட்டு படத்துலேயும் ஒரு பாடலாவது ஸ்வர்ணலதா பாட்டு இடம் பிடிப்பதும் மாதத்துக்கு ரெண்டு பாட்டாவது மெகா ஹிட்டாகி விடுவதும் வாடிக்கை. உச்ச ஸ்தாயியில் இவ
நேருக்கு நேர்  ரிலீஸாகி 23 வருசமாச்சு!

நேருக்கு நேர் ரிலீஸாகி 23 வருசமாச்சு!

நேருக்கு நேர் 1997ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை நிறைந்த அதிரடி படம். இப்படத்தை மணி ரத்னம் தயாரிப்பில் எழுதி இயக்கியவர் இயக்குனர் வசந்த். இப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன் மற்றும் கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடத்திலும், ரகுவரன், சாந்தி கிருஷ்ணா,பேபி ஜெனிபர், கரண், விவேக், மணிவண்ணன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பொதுவான வேடத்திலும் நடிச்சாங்க. இசையை தேவாவும், ஒளிப்பதிவை கே வி ஆனந்தும் செய்துள்ளனர். இது தெலுங்கில் முக முகி என மொழி பெயர்க்கப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இது கமர்சியல் வெற்றியாக அறிவித்ததோடு, 1997 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படம் என்ற பெயரும் எடுத்துச்சு (தகவல் உதவி : கட்டிங் கண்ணையா) ஆரம்பத்தில் வசந்த் தனது பிரிய நாயகனான ஆசை அஜீத் மற்றும் விஜய்யை முக்கிய வேடத்தில் நடிக்கக் கேட்டார். ஆனால், ஷூட்டிங் ஆரம்பிச்ச 18 நாட்களிலேயே கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அஜீத்
தில்லானா மோகனாம்பாள்- திரும்பிப் பார்ப்போமா?

தில்லானா மோகனாம்பாள்- திரும்பிப் பார்ப்போமா?

சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப் படத்தை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். ஆம்.. தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. 52 வருடங்கள் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் சித்திரத்திற்கு இணையான ஒரு படம் உருவாகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலாகித்து ட்ரெண்டிங் உருவாக்கி மகிழ்கிறார்கள். இச்சூழலில் இந்த தில்லானா மோகனாம்பாள் குறித்து நம் கட்டிங் கண்ணையா வழங்கும் சிறப்புக் கட்டுரை இதோ: 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தே
ரஜினியின் அண்ணாமலை-க்கு 28 வயசு

ரஜினியின் அண்ணாமலை-க்கு 28 வயசு

ஆக்டர் விஜய்யிடம் ஒரு முறை எந்த ரஜினி படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டதற்கு பட்டென்று அவர் சொன்ன பதில் அண்ணாமலை. ஆம்.. தமிழில் ஹிட் அடித்த சினிமாவின் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஒரு படம் அண்ணாமலை. ரஜினிகாந்த் நடித்து கவிதாலயா தயாரிப்பில் சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவான படம் அண்ணாமலை. முதல் முதலாக தேவா இப்படத்துக்காக ரஜினிகாந்துக்கு உருவாக்கிய டைட்டில் இசை இன்றும் பல ரஜினி படங்களுக்கு டைட்டிலில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு ஒரு மாஸ் ஆன இசை அது. முந்தைய தலைமுறை நடிகர்கள் நடிக்க வரும்போது பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை பேசிக் காட்டி விட்டு நடிக்க வந்தார்கள். அடுத்த தலைமுறை முழுக்க அண்ணாமலைக்கு அடிமை. விஜய் நடிக்க வந்த புதிதில் அவர் அப்பாவிடம் நடித்து காட்டியதும் கூட அண்ணாமலை காட்சியை தான். அந்த அளவுக்கு
திரையுலக “மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா!

திரையுலக “மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா!

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அங்க ஒரு குகை இருக்கும். அந்த குகையில ஒரு கூண்டு, அந்த கூண்டுக்குள்ள ஓரு கிளி இருக்கும். அதுல தான் அந்த மந்திரவாதியோட உயிர் இருக்கு. கற்பனைக் கதைகளும் மந்திர தந்திரக் கதைகளும் கேட்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அலாதியானது. இதுபோன்ற கதைகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர்தான் மாயாஜால மன்னன் இயக்குநர் விட்டலாச்சாரியா. தெலுங்குத் திரையுலகில் அதிகமான படங்களை இயக்கிய விட்டலாச்சாரியா, பெரும்பாலான படங்களை அவரது ‘விட்டல் புரொடக்‌ஷன்ஸ்’ மூலமாக தயாரித்தார். ஜகன் மோகினி, மாயா மோகினி போன்ற மோகினிகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். பயங்கர உயரமான சிலை சிரிப்பது, பாய் பறப்பது, வித்தியாசமான மந்திரச் சொற்கள் என விட்டலாச்சாரியா படங்கள் விநோதமான அனுபவத்தை தரும். ஜகன் மோகினியையும் ஜெயமாலினியையும் மறக்கமுடியாத ஐயாக்கள் இங்கே ஆயிரம் ஆயிரம் பேர் உண்டு. இவரத
அன்னக்கிளி ரிலீஸ் ஆன 1976ல் இளையராஜா கொடுத்த முதல் பேட்டி!

அன்னக்கிளி ரிலீஸ் ஆன 1976ல் இளையராஜா கொடுத்த முதல் பேட்டி!

அன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், 'பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில் வாசிக்கும் பேறு பெற்றேன். ‘அன்னக்கிளி’ வெளியான இன்றைய (மே 14) சிறப்புப் பதிவாய் அது அப்படியே உங்கள் பார்வைக்கென… இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த படங்களிலேயே நூறு நாட்களைத் தாண்டி, வெள்ளி விழாக்கொண்டாடும் ஒரே படம் ‘அன்னக்கிளி’. ஒரு சாதாரண கறுப்பு வெள்ளைப் படம் ஏனைய கலர்ப்படங்களை எல்லாம் மீறி வெற்றி வாகை சூடிக்கொண்டது. அதன் வெற்றிக்குரிய பல காரணங்களில் ஒன்று, இளையராஜாவின் இனிமையான இசை. இன்று நகர வீதிகளிலும், பட்டிதொட்டிகளிலும், ‘அன்னக்கிளி’ படப்பாடல்கள் எங்கு நோக்கினும் ரீங்காரமிடுகின்றன. திரையுலக இசையமைப்பாளர்கள் அறிமுகமாவது வெகுஅபூர்வம். அப்படியே அறிமுகமானவர்களில் பலருக்கு தொடர்ந்தாற்போன்ற வாய்ப்புகளும் கிடைத்ததில்லை. ஆனால் இளையராஜா அறிமுகமான முத
கில்லி ரிலீஸாகி ஸ்வீட் 16 இயர்ஸ் ஆச்சாம்!

கில்லி ரிலீஸாகி ஸ்வீட் 16 இயர்ஸ் ஆச்சாம்!

2004, ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று வெளியானது கில்லி படம். ஒக்கடு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக். பகவதி, திருமலை என அதற்கு முன்பு விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் கில்லி படம் விஜய்யின் புகழை ஒரே நாளில் உயர்த்தியது. விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு எப்படி பூவே உனக்காக மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல கில்லி, விஜய்யை சூப்பர் ஸ்டார் நிலைக்குக் கொண்டு சென்றது. அதுவும் அந்த ஹிட். இரண்டு மாதத்திற்குள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் டிவியில் ஒளிப்பரப்பானது. அந்த அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட். அந்தப் படம் வெளியாகி இன்னியோட 16 வருஷங்கள் ஆகுதாம். இந்த கில்லி உருவானக் கதை குறித்து நம்ம கட்டிங் கண்ணையா சொன்ன சுவையான தகவல் தொகுப்பு இதோ: மகேஷ் பாபு நடித்து ஹிட் ஆன ஒக்கடு
சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் பட தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன் !

சென்னையில் உருவான முதல் தமிழ் பேசும் பட தயாரிப்பாளர் சிவகங்கை ஏ.நாராயணன் !

நூறாண்டுகளைக் கடந்து விட்ட சினிமாவின் வளர்ர்ச்சிகளில் பலரின் அயராத உழைப்பும் அடங்கிக் கிடக்கிறது. இப்போது புதுசாக மார்கெட்டுக்கு வந்த ஒரு கேமரா-வை அல்லது டெக்னால்ஜி வசதியை ஆன் லைபில் ஆர்டர் செய்து அடுத்த நாளே உபயோகிப்போர் அதிகம் என்றாலும் முன்னொரு கால சினிமா வளர்ச்சியை பலரும் மறந்து போவதுதான் சோகம். அந்த வகையில் 1930-களில் தொடங்கி 1940-கள் வரையிலும் ரசிகர்களின் ரசனை பக்திமயமாக இருந்தது ஒருபக்கம். அதே சமயம் பேசும்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களோ பாம்பே, கல்கத்தா ஸ்டுடியோ முதலாளிகளின் பிடியில் இருந்தார்கள். ஒரு பேசும் படத்தை எடுக்க, அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், நளபாக கோஷ்டி, இன்ன பிற செட் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு பெரும் குழுவாக ரயிலில் நான்கு நாள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பெரிய குழுவைக் கட்டி இழுத்துச் செல்வதும் பராமரிப்பதும் படத் தயாரிப்பாளருக்குப் பெரிய சுமையா
அந்தக் காலத்திலேயே  ஹாரிபாட்டர் படமெடுத்த விட்டலாச்சார்யா!

அந்தக் காலத்திலேயே ஹாரிபாட்டர் படமெடுத்த விட்டலாச்சார்யா!

சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத் தவர்களாக இருந்தாலும், அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, அக்காலத்தில் வெளிவந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களை சொல்லலாம். 'மாய மோதிரம்', 'ஜெகன் மோகினி' போன்ற திரைப்படங்கள் அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஆனால் அவைகள் குழந்தைகளுக் கென்று உருவாக்கப்படவில்லை..! பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை. அதாவது நம்ம சின்ன வயதில் நம் பாட்டி சொல்லும் மந்திரக் கதைகளில் இடம்பெறும் வரிகள், ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அங்க ஒரு குகை இருக்கும். அந்த குகையில ஒரு கூண்டு, அந்த கூண்டுக்குள்ள ஓரு கிளி இருக்கும். அதுல தான் அந்த மந்திரவாதியோட உயிர் இருக்கு. கற்பனைக் கதைகளும் மந்திர தந்திரக் கதைகளும் கேட்கும் போது இரு