சினிமா – நாளை

எஸ்.பி ஜனநாதனின் லாபம் படத்தின் ஜோடி விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன்!

எஸ்.பி ஜனநாதனின் லாபம் படத்தின் ஜோடி விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன்!

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம். இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அவர் லாபம் படத்தில் நடிக்க இருப்பதே முதல் லாபம். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெறும் படங்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல பதிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதிஹாசன். அப்படியான படமாக அவருக்கு லாபம் அமைந்து
வைகறை பாலன் இயக்கும் ‘சீயான்கள்’

வைகறை பாலன் இயக்கும் ‘சீயான்கள்’

ஒவ்வொரு நிமிடமும் கோபம், சிரிப்பு, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, காதல், ஏக்கம், சோகம், விரக்தி…எனப் பலபல உணர்வுகளைக் காட்டும் மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான். குழந்தையை போன்ற ஒரு அப்பாவியான தன்மை மற்றும் சந்தோஷமான இயல்புகள் எப்போதும் தனது ராஜ்யத்தில் மனிதர்களை வரவேற்க தயாராக உள்ளன. அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது. சீயான்கள் அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதை. தூய்மையான மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களை கொண்டு சொர்க்கம் போன்ற ஒரு பின்னணியில் தயாராக உள்ளது. இதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள அழகான ஒரு சில கிராமங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் வைகறை பாலன். இது குறித்து இயக்குனர் வைகறை பா
S.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

S.S.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் “ஆர் ஆர் ஆர்”

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் "ஆர்.ஆர்.ஆர்" 300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் "ஆர் ஆர் ஆர்" படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க, உடன் சமூத்திரகனி நடிக்கின்றார். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர். இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் "ஆர் ஆர் ஆர்" திரைப்படம் 1920 களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது. தெலுங்கு, தமி
விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”

விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”

ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ. செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் "காக்கி" .இது வரை சினிமா வரலாற்றில் பல போலீஸ் கதை பின்னணியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மைய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது "காக்கி". இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர். வாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்ப
ஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமெடிப் படம்  ‘ஜாம்பி’1

ஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமெடிப் படம் ‘ஜாம்பி’1

எஸ் 3 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘ஜாம்பி’. கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதைதான் நாயகனும்.. நாயகியும். வில்லனும். ஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமெடியான இப்படத்தில் யோகி பாபு, ‘பிக்பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும்  பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள். யூ ட்யூப்(youtube) ‘பரிதாபங்கள்’  புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஆஸ்கர் அவார்டு பெற்ற படமான ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடித்த T.M.கார்த்திக் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் மனோபாலா,  அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், ‘மியூசிக்கலி’ புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரேம்ஜி இப்படத்திற்கு இசை  அமைக்கிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் கல
பிரபுதேவா குங்பூ மாஸ்டராக நடிக்கும்’எங் மங் சங்’!

பிரபுதேவா குங்பூ மாஸ்டராக நடிக்கும்’எங் மங் சங்’!

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப் படம் ‘எங் மங் சங்.’ இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி,  சித்ரா லட்சுமணன், ‘கும்கி’ அஸ்வின்,  ‘காளி’ வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபாகர் இந்தப் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். ஒளிப்பதிவு – R.P.குருதேவ், படத் தொகுப்பு – பாசில், நிரஞ்சன், பாடல்கள்  -பிரபுதேவா, மு.ரவிக்குமார், இசை – அம்ரீஷ், நடனம் – ஸ்ரீதர், நோபல், சண்டை பயிற்சி – சில்வா, தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அர்ஜுன்.M.S. 1980-ம் வருட காலக்கட்டத்தில் நடப்பது மாதிர
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? என்றை பெயரில் ஒரு சினிமா!

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? என்றை பெயரில் ஒரு சினிமா!

“நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” இது தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்கள் மனதிலும் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி. பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப் படம் தயாராகி வருகிறது.. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையு
கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் “கோடீஸ்வரி “

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் “கோடீஸ்வரி “

ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "கோடீஸ்வரி " என்று பெயரிட்டுள்ளனர். இந்த குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார்.    நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார்.  இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக காவல் துறை அதிகாரியாக ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த  எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகிகளாக் அஷ்மா , சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கராத்தேராஜா, டி.பி கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக்  ஆகியோர் நடிக்கிறார்கள். தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் .கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன்  ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -    A.S.ராஜ்
ஜெய்-பானு நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ -ஸூக்கு பூஜை போட்டாச்சு!

ஜெய்-பானு நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ -ஸூக்கு பூஜை போட்டாச்சு!

‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய தமிழ்த் திரைப்படம் நேற்று காலை AVM ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியது.  ராகுல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கே.திருக் கடல் உதயம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், ‘வேதாளம்’ வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ.கருப்பையா, ராதாரவி, கிருதுவாரகீஷ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் படங்களில் கிராபிக்ஸ் வல்லுநராகப் பணியாற்றிய ஆண்ட்ரூ பாண்டியன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்டில் இப்படத்தின் காட்சிகள் உருவாக உள்ளது.  சமூகத்தில் நடக்கும் அநீதிகள், ப
மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாகியுள்ளது. காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. தெலுங்குலகின் மிகப் பெரிய கதாசிரியர்களில் ஒருவரானா கோனா வெங்கட், கோபி மோகன் உடன் இணைந்து இந்தப் படத்திற்கான கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராக வும் பணிபுரிகிறார். ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். கோபி சுந்தர் இசையமைக்கிறார். பாப் பிரவுன்