திரை பிரபலங்கள் பாராட்டிய ” கள்வா ” குரும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்றது!

திரை பிரபலங்கள் பாராட்டிய ” கள்வா ” குரும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்றது!

இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குனர்களின் பெயரில் ஆண்டு தோறும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நிறைவு நிகழ்ச்சியில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஜியா எழுதி, இயக்கியுள்ள கள்வா குறும்படத்துக்கு சிறந்த ரொமான்டிக் திரில்லர் படத்துக்கான விருது வழங்கப்பட்டது. இதை ஜியா பெற்றுக்கொண்டு பேசும்போது, ‘எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி, எனது குடும்பத்தாருக்கும், கள்வா படக்குழுவினருக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் திரைப்பட விழா குழுவினருக்கும் நன்றிகள்’ என்றார். தனது பேச்சை முடிக்கும்போது, ‘எல்லா புகழக்கும் இறைவனுக்கே’ என தமிழில் ஜியா கூறும்போது, கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் 643 படங்கள் போட்டியிட்டன. இதில் விருதுக்காக 85 படங்கள்…
Read More
பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் படத்தின் பூஜை ! நடிகர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்!

பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் படத்தின் பூஜை ! நடிகர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்!

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம் பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார்.மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1 அன்று படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, 'சித்திரம் பேசுதடி', 'பள்ளிக்கூடம்', 'மதராசபட்டினம்', 'தெய்வத்திருமகள்', 'மனிதன்', 'சென்னையில் ஒரு நாள்', 'லக்ஷ்மி', 'தலைவி', உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி…
Read More
விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா!

விஜய் டிவி புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தின் தொடக்க விழா!

  யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்,முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம் பிரபலமான மாறன்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் , சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு , மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.   'துடிக்கிறது மீசை'படத்தைப் பற்றி இயக்குநர் எம்.ஜே. இளன் பேசும்போது, "நான் இயக்குநர் எஸ்.டி.சபா அவர்களிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி தாணு அவர்களிடமும் பணியாற்றி சினிமாவில் பல துறைகள் பற்றியும் அறிந்து அனுபவம் பெற்று இருக்கிறேன். படத்தின் கதை என்னவென்றால்,காதல் தவறில்லை. ஆனால்,காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பதைத் தவறு என்று சொல்கிற கதை…
Read More
விக்ராந்த் திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் உருவாகும் ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

விக்ராந்த் திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் உருவாகும் ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

  பலரின் கனவுப் படமான ‘ஸ்பார்க்’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது.'ஸ்பார்க் லைஃப்' அதிக பட்ஜெட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் . சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'ஸ்பார்க் லைஃப்' டீஸர் வீடியோ 2 நிமிடம் மற்றும் 2 வினாடிகள் நீளம் கொண்டது. மேலும், பார்வையாளர்களை உற்சாகப்படுத்த விக்ராந்த் ஒரு ஹை-ஆக்டேன் அதிரடி வழியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தின் டீசர் நெருப்பு, இறந்த உடல்கள் மற்றும் நிறைய இரத்தக்களரிகளுடன் தொடங்குகிறது. விக்ராந்த் நெருப்பின் மூலம் அறிமுகமாகிறார், ராப் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. செயல், காதல் மற்றும் விசாரணையின் காட்சிகள் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. இப்படத்தில் விக்ராந்த் சில கடினமான ஆக்ஷன் காட்சிகளை செய்துள்ளதாக தெரிகிறது. படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக உள்ளது, மேலும்…
Read More
ஓடிடி தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த மாமன்னன் திரைப்படம்!

ஓடிடி தளத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த மாமன்னன் திரைப்படம்!

  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல்,  விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது. தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK வின் எடிட்டிங், மனதை உருக்கும் இசைப்புயல் ஏ…
Read More
கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

கவினின் திருமண தேதி அறிவிப்பு ! இவர்தான் மணப்பெண்ணா !

  திருச்சியில் இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒரு பிரபலம்.2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க தொடங்கிய இவர் அடுத்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி என சீரியல்களில் நடித்து வந்தார். அதேபோல் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின் பிக்பாஸில் கலந்துகொண்ட பெரிய ரீச் பெற்ற கவின் லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். அடுத்தடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். பிக்பாஸில் லாஸ்லியாவை காதலித்த கவின் வெளியே வந்தபிறகு காதலை தொடர்வாரா என்றெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் நீ யாரோ நான் யாரோ என்றிருக்கிறார்கள். தற்போது கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
Read More
ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது, ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. தற்போது படக்குழு ப்ரோமோஷன் பணிகளை மிக வேகமாக செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஒரு கோரிக்கையை ரஜினிக்கு வைத்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை வெளியிட வேண்டும் என்பது தான் அது. அதற்கு ரஜினி செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.…
Read More
அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

அமலா பால் தேர்வு செய்த கதாபாத்திரத்தில் ஷங்கரின் மகள் அதிதி! “ராட்ஷசன் 2” படத்தில் திடீர் மாற்றம்!

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி வலம் வருகிறார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி ஷங்கருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைச்சுது. அதேவேகத்தில் மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிச்சார் அதிதி ஷங்கர். இந்தப் படம் இரு வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மாவீரன் படத்தில் அதிதி கமிட்டான போதே இளம் நடிகைகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதால், அதிதி எளிதாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகிவிடுவதாக சொல்லப்பட்டுச்சு. தற்போது அமலா பால் நடிக்க வேண்டிய படத்திலும் அதிதி கமிட்டாகவுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால் - இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் முதன்முறையாக உருவான 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகியிருந்தது. இதனையடுத்து இக்கூட்டணியில் வெளியான 'ராட்சசன்' ஹாரர் ப்ளஸ் சைக்கோ…
Read More
அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் செல்வராகவன் மற்றும் யோகி பாபு! தெலுங்கு நடிகர் சுனிலும் இணைந்துள்ளார்!

அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் செல்வராகவன் மற்றும் யோகி பாபு! தெலுங்கு நடிகர் சுனிலும் இணைந்துள்ளார்!

  சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.…
Read More
ராஜ நடைபோட்டு மன்னராக நடந்து வரும் ராகவா லாரன்ஸ்! வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ராஜ நடைபோட்டு மன்னராக நடந்து வரும் ராகவா லாரன்ஸ்! வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

  தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திகில்- காமெடி திரைப்படமான 'சந்திரமுகி 2' படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது. பன்முக திறமையுள்ள கலைஞரான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' இந்த ஆண்டின் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருக்கிறார். மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களை வழங்கிய பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக இந்த திரைப்படம் தயாராகிறது. இதில்…
Read More