சினிமா – இன்று

அமீரா பட நாயகிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்கிறார் டைரக்டர்!

அமீரா பட நாயகிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்கிறார் டைரக்டர்!

செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..சீமானிடம் உதவி இயக்குநராகப் பணி யாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். பல சர்வதேச விருது களைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனை களைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்
படைப்பாளன் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

படைப்பாளன் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

LS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான்  பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில், கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது, “இந்தப் படத்தின் இயக்குநர் பிரபுராஜா சினிமாவிற்கு முயற்சி செய்தபோதெல்லாம் நான் கோபப் பட்டிருக்கேன். ஏன் நீ இந்த துறைக்கு வருகிறாய்  என்று சத்தம் போட்டிருக்கேன். ஆனால் இன்று தம்பியைப் பார்த்து வெட்கித் தலைகுனிகிறேன். படத்தை தம்பி அவ்வளவு சிறப்பாக எடுத்து இருக்கிறார். அவருக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்க வாழ்த்துகள்” என்றார்  இசை அமைப்பாளர் கிருபாகரன் பேசியதாவது, “நான் வேலை விட்டுட்டு சினிமாவிற்கு வந்தவன். இந்தப் பீல்டில் பத்து வருடமாக இருக்கிறேன்.
மகாமுனி – எட்டு வருஷ பிராஜக்ட்! – ஞானவேல் ராஜா வியப்பு!

மகாமுனி – எட்டு வருஷ பிராஜக்ட்! – ஞானவேல் ராஜா வியப்பு!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான் பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவரு
தண்டகன் ஆடியோ ரிலீஸ் அப்டேட் ரிப்போர்ட்!

தண்டகன் ஆடியோ ரிலீஸ் அப்டேட் ரிப்போர்ட்!

'தண்டகன்’ என்னும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடை பெற்றது. இவ் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது , “இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார் . அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம் ? எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார் ? சினிமா ஒரு நல்ல அருமையான தொழில் .இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது .இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது.. அது பலருக்கும் தெரிவதில்லை
நடிகர் ஆர்கே விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்தார்!

நடிகர் ஆர்கே விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை நிரூபித்து கின்னஸ் சாதனை படைத்தார்!

ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார். வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது. இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப் படுத்துவதற்காக இதன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிரூபிப் பதற்காக மிகப்பெரிய கின்னஸ் சாதனையை இந்த சுதந்திர தினத்தன்று (ஆக-15) சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார். சரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்ப
கலைமாமணி விருது வழங்கும் விழா -துளிகள்!

கலைமாமணி விருது வழங்கும் விழா -துளிகள்!

இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று (ஆகஸ்ட் 13) மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திரைப்படம், கலை, இலக்கியம், நாடகம், இசை உள்ளிட்ட துறைகளில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்குத் தமிழக அரசினால் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருது 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. 2011 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக கலைமாமணி விருது அறிவிக்கப்படவே இல்லை. இந்த நிலையில், சமீபத்தில் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. நடிகர்களில்
குருக்ஷேத்ரம் பிரஸ் மீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

குருக்ஷேத்ரம் பிரஸ் மீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் .  இந்த மகாபாரத இதிகாசப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ்,கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ்,திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள் . இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டு உள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்து உள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது .இதையொட்டி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
கன்னி ராசி பத்திரிகை யாளர் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

கன்னி ராசி பத்திரிகை யாளர் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைக
Provoke magazine வழங்கிய சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!!

Provoke magazine வழங்கிய சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்!!

நடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாரா
டைம் இல்லா படத்துக்கு வந்த சோதனை பாரீர்!

டைம் இல்லா படத்துக்கு வந்த சோதனை பாரீர்!

சதீஷ் கர்ணா என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய டைம் இல்ல என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்த மனு பார்த்திபன், தன்னால் உருவாக்கப் பட்ட படத்தில் என் ஒட்டு மொத்த உழைப்பை திருடி என்னை அழிக்க பார்க்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகிய காமெடிப் படம் டைம் இல்ல. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. இப்படத்தை மனு பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் மனு பார்த்தீபன் படத்தை மொத்தமாக அபகரிக்கப் பார்ப்பதாக அறிமுக இயக்குநர் சதீஷ் கர்ணா குற்றம் சாட்டியுள்ளார். சதீஷ் கர்ணா படத்தை நிறைவு செய்து, சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளார். தற்போது, திடீரென சதீஷ் கர்ணாவை காரணம் இல்லாமல் நீக்கி விட்டு, தயாரித்து நடித்த மனு பார்த்திபனே இப்படத்தை இயக்கியதாகவும் அறிவித்து