கோலிவுட்

“மிஸ்டர் டபிள்யூ ”  திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் !

“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் !

சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. எஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, ” ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.உடலுக்கு உடை அழகு.முகத்திற்கு மீசை அழகு.பாடலுக்கு நடனம் அழகுஎன்று கூறி வரும் சமுதாயத்தில்ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி . . ஊர்வசி … பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி ” என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை
நவம்பர் மழையில் நானும் அவளும்!

நவம்பர் மழையில் நானும் அவளும்!

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். ‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, ‘மைனா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்.
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி:  சட்ட ரீதியாக சந்திக்க முடிவு!

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி: சட்ட ரீதியாக சந்திக்க முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஜூன் 23 ம் தேதி நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் கோரி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு விசாரணை கடந்த மாதம் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. அதே சமயம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்துள்ளது. இப்படி நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப் படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை
மிக மிக அவசரம் – ரிவியூ!

மிக மிக அவசரம் – ரிவியூ!

ஒரு சினிமா என்பது சமூகத்திற்கு ஏதாவதொரு நல்லதொரு மெசெஜை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அறுந்து போன ரீலாகி பல காலமாச்சு. ஆனால் இப்போ ரிலீஸ் ஆகியுள்ள மிக மிக அவசரம் என்றொரு படத்தின் மூலம் போலீஸ் அதிகார வர்க்கத்தின் குரூர போக்கு + நட்புணர்வை வெளிக்காட்டுவதுடன் பெண் போலீசின் அதுவும் கொஞ்சம் அழகான லேடி கான்ஸ்டபிள்களின் அவஸ்தையை சகலருக்கும் புரியும்படியும் எக்ஸ்ட்ராவா ஒரு ஹெல்த் அலெர்-டையும் செய்து இருக்கிறார் புது இயக்குநர் சுரேஷ் காமாட்சி. ஆமாமுங்க.. இந்தப் படத்தின் விமர்சனத்துக்குள் போகும் முன் ஒரு விஷயம்: நம் இதயத்தைப் போலவே ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்தி விட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறு நீரகங்கள்தான். சிறுநீரகத்தை அத
சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வைப் பாராட்டிய சல்மான்கான்!

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ வைப் பாராட்டிய சல்மான்கான்!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சூழலில் ‘தபாங் 3’ படத்தின் புரொமஷனல் நிகழ்ச்சிக்கு வந்த சல்மான்கான் இந்தி பேசும் பிரதேசங்களிலும் தமிழ்ப் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை விவரித்தவர், தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீசரையும் வெளியிட்டார். தனது மைக்ரோ பிளாக்கில் டீசரை வெளியிட்ட சல்மான் ‘ஹீரோ’ படத்தின் ஸ்டைலான அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினாராம். இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டு
கைதி கேரக்டரில் நடித்த நான் ‘பட்டை’ போட்டது ஏன்? கார்த்தி விளக்கம்!

கைதி கேரக்டரில் நடித்த நான் ‘பட்டை’ போட்டது ஏன்? கார்த்தி விளக்கம்!

தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கும் நோக்கில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசிய போது, “’கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்திரவா இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர
பிகில் -ரிவியூ!

பிகில் -ரிவியூ!

நீங்கள் தேவர் மகன் பார்த்து விட்டீர்களா? நீங்கள் ‘தளபதி’, பார்த்தாச்சா? நீங்கள் ‘வேட்டையாடு விளையாடு’, கண்டிருக்கீங்களா? அட.. ’பாட்ஷா’ -வை டிவியிலாவது வாட்ச் பண்ணி இருக்கீங்களா? அப்புறம் இந்த ‘சக்தே இந்தியா’, ‘இறுதிச்சுற்று’, ’கென்னடி கிளப்’ போன்ற படங்களில் இருந்து எதையாவது எப்போதாவது கண்டு ஸ்மைல் பண்ணி இருக்கீங்களா?- அப்படின்னா விஜய்- யை வைத்து அட்லீ இயக்கிய பிகில் படம் உங்களுக்கு முழுமையாக பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் ஒரு சினிமா அதுவும் அட்லி & விஜய் காம்பினேஷன் படம் என்றால் சரவெடியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் ஆசைப்பட்டால் உங்கள் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது இந்த பிகில். இந்தக் கால யூத்களின் ஒருவரான சகல ஆன்லைன் மீடியாக்களையும் அப்டேட்-டாக வாட்ச் பண்ணும் டைரக்டர் அட்லீ இந்த பிகில் என்ற டைட்டிலில் சொல்லி இருக்கும் கதை என்னவென்றா
வாழ்க்கையில் வெற்றி பெற தலைமயிர் உதவாது என்பதை சொல்ல வரும் ‘சொட்ட’!

வாழ்க்கையில் வெற்றி பெற தலைமயிர் உதவாது என்பதை சொல்ல வரும் ‘சொட்ட’!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலக சாதனைப் படத்தை இயக்கினார் இசாக். இவர் நடிகர் ‘நெடுஞ்சாலை’ ஆரியை வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்பொழுது “சொட்ட” திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் ஹிந்தியில் ‘ஹேர் இஸ் பாலிங்’ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இளம் வயதிலேயே தலைமுடி உதிரும் இளைஞன் ஒருவன் தன் வாழ்வில் காதல், தொழில், திருமணம் என அனைத்திலும் அடுக்கடுக்காக தோல்வி அடைகிறான். மீண்டும் அதே இளைஞன் எப்படி தனது வழுக்கை தலையுடன் தன் காதல், தொழில், திருமணத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதை “சொட்ட”. இப்படத்தை மேன்டியோ பிலிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் ஜெமினி ரெய்கர் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பிரபல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் இ
சினிமா-வால்  வாழ்க்கையைக் கற்றுக் கொண்டேன் – நடிகர் வசந்த் ரவி

சினிமா-வால் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டேன் – நடிகர் வசந்த் ரவி

திரைத்துறைக்கு வந்தது பற்றியும் நடிக்கும் அனுபவங்களைக் குறித்தும் நடிகர் வசந்த் ரவி கூறியதாவது :- சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது சென்னை. ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்தேன். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வமிருந்தாலும் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. ஆனால், எனது பெற்றோருக்கு பிடிக்க வில்லை. எது செய்வதாக இருந்தாலும் மருத்துவம் படித்துவிட்டு செய் என்றார்கள். அவர்கள் கூறியதுபோல நானும் படித்து முடித்தேன். நடிப்பின் மீதிருந்த ஆர்வம் குறையாததால் மும்பைக்குச் சென்று அனுபம்கேர் நடிப்பு பள்ளியில் பயிற்சி மேற்கொண்டேன். பின்பு ராஜீவ் மேனனிடமும் பணியாற்றினேன். ஆனால், பெற்றோர்கள் மருத்துவம் மட்டும் போதாது மருத்துவ மேற்படிப்பும் படிக்க வேண்டும் என்றதும், மருத்துவமே படித்தால் அந்த துறையிலிருந்து வரமுடியாது என்ற காரணத்தால் மருத்துவம
கைதி விமர்சனம்!

கைதி விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக காட்டப்படும் அப்பா- மகள் பாசத்தையும், அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் அட்ராசிட்டை யையும் ட்ரீம் வாரியர் என்னும் பேமஸ் பானையில் போட்டு கரம் மசாலா, காரம், உப்பு ஆகியவற்றை தேவையான அளவு கலந்து வடிக்கப்பட்ட படையல்தான் ‘கைதி’ படம். இப்படத்தில் பாடலோ, காமெடி ட்ராக்கோ அல்லது ஹீரோயினோ இல்லைதான். ஆனால் அந்த குறைகள் கொஞ்சம் கூட தெரியாத அளவில் நாயகன் கார்த்தி புண்ணியத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறான் இந்த கைதி. கதை ரொம்ப சிம்பிள்தான்.. அதாவது கொலை கைதியாகி 10 வருட சிறைத் தண்டனையில் இருந்து வெளியே வரும் கார்த்தி, அநாதை இல்லத்தில் இருக்கும் தனது மகளை பார்க்க செல்கிறார், வழி யில் சந்தேகத்தின் பெயரில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில் எம் ஜி ஆரின் மானசிக தலைநகராம் திருச்சி போலீஸ் அதிகாரிகள் சில பலரை கொலை செய்து விட்டு , கமிஷனர் அலுவலகத்தில் இருக