Author: admin

பக்கா பேமிலி என்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகுது  ‘சர்பத்’!

பக்கா பேமிலி என்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகுது ‘சர்பத்’!

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல் முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமராமேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல பட
தும்பா படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் ஜெயம் ரவி!

தும்பா படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் ஜெயம் ரவி!

பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான 'பேராண்மை' மற்றும் 'வனமகன்' போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த 'தும்பா' படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, "இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்டது
கொலைகாரன் சக்சஸை அடுத்து புது படம் தயாரிக்கும் தனஞ்செயன் டீம்!

கொலைகாரன் சக்சஸை அடுத்து புது படம் தயாரிக்கும் தனஞ்செயன் டீம்!

Uncategorized
கொலைகாரன் என்ற வெற்றிப்படத்தை இணைந்து கொடுத்த போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ் உடன் பிரபல ஃபைனான்சியர் கமல் போரா இணைந்து "இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் கீழ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். அவர்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான “கொலைகாரன்” திரைப்படம், நல்ல விமர்சனங்களையும், நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து 'இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயா
சிறகு ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்!

சிறகு ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்!

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசிய போது, “இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார் நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசுகையில், “என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி” என்றார். நடிகை டாக்டர் வித
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்‘க/பெ ரணசிங்கம்’!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்‘க/பெ ரணசிங்கம்’!

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி - இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்’  இத்திரைப்படத்தில், ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து, கே ஜேஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில், நயன்தாரா நடித்த ‘அறம், ஐரா’, மற்றும் பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்தவரும், அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகித்தவருமான கே ஜே ராஜேஷ், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரித்து வரும் நிலையில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.  இப்படத