Wednesday, October 21, 2020

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் எப்போ? யார்? எப்படி போட்டி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி...

Latest Posts

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா!

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி...

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர்தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என...

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது...

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800...

பாடிப் பறந்த பாலு காலமானார்!

இந்திய இசையுலகின் தனிப் பெரும் பாடகரான எஸ்.பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்று காலமானார். அவருக்கு வயது 74

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, தொற்றின் பாதிப்பு தீவரமடைந்தது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அவரது மகன் S.P.சரண் தனது தந்தையின் உடல் நலம் மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும், எங்களுடன் சைகையில் பேசுகிறார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி அவரும் கொரோனா நெகடிவ் வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் அவரது நலம் விரும்பிகள், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.சில தினங்களுக்கு முன் எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள பதிவில் எனது தந்தை நலம் பெறுவதற்கான நிலையான முன்னேற்றத்தைத் தொடர்கிறார். எக்மோ மற்றும் வென்டிலேட்டர், பிசியோதெரபி, வாய்வழி திரவங்களுடன் உணவு கொடுக்கப்படுகிறது. அவர் விரைவில் மருத்துவமனையை விட்டு வெளியேற ஆர்வமாக உள்ளார் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் மிக ஆபத்தான நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை உள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

தகவலறிந்த நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வந்தார். மேலும் இன்று காலை எஸ்பி பாலசுப்பிர மணியத்தின் உறுவினர்கள் மற்றும் அவருக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்ட இயக்குநர் பாரதிராஜா மருத்துமனைக்கு நேரில் வந்து எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்து சென்றார்.

இந்நிலையில், சற்று முன் SPB உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் இறுதி சடங்கு நடைபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்தார். பாடகர் எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவரின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

Latest Posts

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா!

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி...

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர்தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என...

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது...

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800...

Don't Miss

திரையரங்குகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள்!

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா...

புத்தம் புதுக் காலை – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=AkqwSYwtbTI&feature=youtu.be

அமலா 30 வருஷங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறாஹ!

கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா மீண்டும் செயல்படத் துவங்கி யிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்...

நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் விமல்!

விமலின் நடிப்பில் தயாராகி வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து',  இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில்...

காந்தக் கண்ணழகி ‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை- படமாகிறது!

1980-களிலும், 1990-களிலும் தென்னிந்திய திரைப்பட துறையில்… இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், நடிகர்களாலும் தவிர்க்க முடியாத  கவர்ச்சி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. அவருக்கு முன்னால்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.