விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் பட அப்டேட்!

மாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக  பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். Dharma Productions சார்பில் பாலிவுட் பிரபலம்  கரண் ஜோஹர் தயாரிக்க சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இப்படம் “ஷெர்ஷா” என தலைப்பிடப்பட்டுள்ளது. கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா  வாழ்வை  மையமாக கொண்டு உருவாகும் இப்படம் 2020 ஜூலை 3 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கலக்கலான வடிவமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் ஸ்டைலீஷ் கேங்ஸ்டர் படங்கள், ரசிகர்களை கவரும் திரில்லர் படங்கள் என நன்மதிப்பை பெற்ற  இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல்முறையாக முற்றிலும் வேறொரு ஜானரில்  தன் பயணத்தை துவங்கியுள்ளார். கார்கில் போரின் பின்னணியில் போர் நாயகனை வைத்து, உண்மைகதையை இயக்குவது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் புது அனுபவம் தரக்கூடியது. சாக்லெட் பாய், குறும்பு நாயகனாக பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும்  நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா “ஷெர்ஷா” படம் மூலம் முதல்முறையாக மிடுக்கான ராணுவ வீரராக நடிக்கவுள்ளார். “ஷெர்ஷா” படத்தின் குறிப்பிடதகுந்த மற்றுமொரு அம்சம் என்னவெனில் இப்படம் கார்கில் போர் நடந்த பகுதிகளான கார்கில், சண்டிகர், பலம்பூர் பகுதிகளில் நேரடியாக படம்பிடிக்கப்படுகிறது.

2020 ஜூலை 3 வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தை ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா, ஷபீர் போக்ஸ்வாலா, அஜய் ஷா மற்றும் ஹிமான்ஷு காந்தி ஆகியோர் தயாரிக்கிறார்கள். விஷ்ணுவர்தன் முதல்முறையாக ஹிந்தியில் இயக்கும் இப்படத்திற்கு சந்தீப் ஶ்ரீவஸ்தாவா கதை,திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *