‘வர்மா’ படத்திலிருந்து நான்தான் விலகினேன்: இயக்குனர் பாலா விளக்கம்!

.நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்குனர் பாலா இயக்கி வந்தார். திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பாலாவுக்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இரு தினங்களுக்கு முன் திடீரென, பாலா படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும்; படத்தை முழுவதும் வேறு இயக்குனரை வைத்து முதலிலிருந்து எடுக்க உள்ளதாகவும், தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துருவ் தவிர அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

கோலிவுட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரம் குறித்து  இயக்குநர் பாலா  தன் தரப்பு தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

அதில், 

பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு :

‘வர்மா’ படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி, ‘வர்மா’ படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.

கடந்த ஜனவரி மாதம் 220ம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…

துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை.

பாலா”

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்காக இயக்குநர் பாலா தயாரிப்பாளரிடத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

அந்த ஒப்பந்தப்படி,

“எடுத்துக் கொடுத்திருக்கும் படத்தை தயாரிப்பாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். கூட்டலாம். குறைக்கலாம். கூடுதல் காட்சிகளை சேர்க்கலாம். அல்லது புதிதாகவே எடுக்கலாம். ஆனால், படத்தின் எந்தவொரு இடத்திலும் தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது…” என்று அந்த ஒப்பந்தத்தில் பாலா குறிப்பிட்டிருக்கிறார்.

bala-statement-1

bala-statement-2

bala-statement-3