இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்!

”கா….கா….கா….கா..”;

‘காவியமா நெஞ்சில் ஓவியமா’,

‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’,

‘இன்று போய் நாளை வாராய்…’,

‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே…’ போன்ற பாடல்களில் அதன் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி இன்றும் வசீகரிக்க வைக்கும் சி.எஸ்.ஜெயராமனின் குரல்.

தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான்.

ஆம் இசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான ஒரு இசைக்கலைஞர், இசையமைப்பாளர்… (சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…) (அவர் தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்… மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மைத்துனர் CSJ என்பது அவருக்கான இன்னொரு அறிமுகம் … ). 1950-60 களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இவரது பங்களிப்பு அதிகம்.

மிகவும் வித்தியாசமான தனிக்குரல்…

வெகு சுலபமாக அடையாளம் கண்டு விடலாம்…

அவரது பாடல்களில் ஒருவித உருக்கத்தையும், உணர்வையும், அழுத்தமான தமிழ் உச்சரிப்பையும் உணர முடியும்…

ஜூபிடரின் கிருஷ்ண விஜயம் படத்துக்கு இவர் இசையமைத்த போதுதான் கணீர் குரல்கொண்ட ஒரு பாடகரை அறிமுகப்படுத்தினார். அவர், டி.எம். சௌந்தரராஜன்.

கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் எண்ணற்ற திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை சி.எஸ்.ஜெ. பாடியிருக்கிறார். மிகச் சிறப்பான பாடகர்; இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, சி.எஸ்.ஜெ. டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் நிபுணத்து வமும் பெற்றிருந்தார். குறிப்பாக கேரம் விளையாட்டுப் போட்டிகளில் சி.எஸ்.ஜெயராமன் இருமுறை தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

சி.எஸ். ஜெயராமன் மறைந்த நாளையொட்டிய அஞ்சலி பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *