Wednesday, October 21, 2020

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் எப்போ? யார்? எப்படி போட்டி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி...

Latest Posts

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா!

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி...

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர்தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என...

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது...

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800...

அமேஸான் பிரைம் வீடியோ-வின் முதல் தமிழ் பிரைம் தொடர் – “வெள்ள ராஜா”!

சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ ஆகிய படங்களைத் தயாரித்த ட்ரீம் வேரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெப் சீரியஸ் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் ‘வெள்ள ராஜாஎன்ற வெப் சீரியஸை தயாரித்து உள்ளார்கள். இந்த வெப் சீரியஸில் உலக அளவில் புகழ் பெற்ற வீடியோ நிறுவனமான அமேஸான் பிரைம் வீடியோவில் வரும் டிசம்பர் 7-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

இந்த வெப் சீரியஸில் நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை பார்வதி நாயரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் குகன் சென்னியப்பன் இந்தத் தொடரை இயக்கி இருக்கிறார். இத்தொடர் போதை மருந்து கடத்தலை கதைக் கருவாகக் கொண்டது. வட சென்னையின் மையத்தில்  அமைந்திருக்கும்  பிரபலமான  தங்கும் விடுதி  ‘பாவா  லாட்ஜ்’.  இந்த விடுதிதான் போதை மருந்து விற்பனையின் மையமாக இருந்து வருகிறது. இந்த விடுதியில்  பிணையக் கைதி  சூழலில்  இருக்கும் நபர்களைச்  சுற்றி  இக்கதை   அமைக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவின் பிரலமான  போதை  மருந்து  கடத்தல்  கும்பலின்  தலைவனான  தேவா நாடு தழுவிய கொக்கைன்(Cocaine) சோதனையைத்  தொடர்ந்து  போலீஸுக்கு பயந்து இந்த விடுதிக்குள் வந்து ஒளிந்திருக்கிறான்.  காவல் துறையின்  மட்டுமன்றி தனது தொழில் எதிரி களிடமிருந்தும் தன் கையில் இருக்கும் போதை பொருட்களுடன் தப்பிக்க நினைக்கிறான். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தத் தொடரின் கதை.

இந்தத் தொடர் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்தத் தொலைக்காட்சித் தொடர் மூலமாக தமிழில்,  பிரம்மாண்டமான  முறையில்,  ஒரு  தைரியமான  கதையை சொல்லி இருக்கிறோம். நாங்கள் தயாரித்த அனைத்து திரைப்படங்களிலும்  தரமான  பொழுது போக்கினையும் மனதில் வைத்தே கதைகளைத் தேர்வு செய்திருக்கிறோம்.  இந்தப் படத்திலும் அதேதான் நடந்திருக்கிறது. உலகலாவிய பிரச்சினையான போதை  மருந்து  உலகம்  குறித்து இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.

இயக்குநர் குகன் சென்னியப்பனின் அழகான இயக்கத்தில் இந்த வீடியோ தொடர் மிக சுவார சியமான திரைக்கதையில் ஆச்சரியப்படுத்தும்வகையில் உருவாகியுள்ளது. பிரைம் வீடியோ  நேயர்களால் இத்தொடர் பெரிதும்  விரும்பப்படும் என்று நம்புகிறோம்.  மேலும்  நமது சென்னையில் நடக்கும் இந்தத் தொடரின் கதையை  இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு  ஏற்றவாறு  மட்டுமின்றி,  அமேஸான்  பிரைம்  வீடியோவில்  இணைந்துள்ள  சர்வதேச  நேயர்களுக்கும் ஏற்றவாறு   வடிவமைத்துள்ளோம்…” என்றார்.

அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா நிறுவனத்தின்  இயக்குநர்  மற்றும்  தலைவரான விஜய் சுப்ரமணியம் இது பற்றி “எங்களது  வீடியோ தொகுப்பில் பல பிளாக் பஸ்டர் தமிழ்த் திரைப்படங்கள் இடம் பெற்றிருப்பதால் தமிழ் நேயர்களிடையே மிகப் பெரிய வரவேற்பினை நாங்கள் பெற்றுள்ளோம். அதே நேரத்தில் வீடியோ தொடர்களையும் இந்திய மண்ணின் கதைகளுடனுடேயே தயாரிக்கவிருக்கிறோம். அதன் முதல் அடையாளம்தான் டிரீம் வேரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ‘வெள்ள ராஜா’ தொடர். இதைத் தொடர்ந்து இன்னும் பல்வேறு இந்திய கதையம்சம் கொண்ட தொடர்களும் எங்களது அமேஸான் பிரைம் நேயர்களுக்காக வரவிருக்கிறது…”  என்று  கூறினார்.

200 நாடுகளில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் அமேஸான் பிரைம் வீடியோவில் வரும் டிசம்பர் 7-ம் தேதி முதல் இந்த ‘வெள்ள ராஜா’ தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும்,  தெலுங்கு  மற்றும்  ஹிந்தி  மொழிகளிலும்  டப்பிங் செய்யப்பட்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப்  காமடி,  மிகப் பெரிய  இந்திய  மற்றும்  ஹாலிவுட் திரைப்படங்கள்,  யு.எஸ். தொலைகாட்சித்  தொடர்கள்,  பிரபலமான  இந்திய  மற்றும்  சர்வதேச  குழந்தைகள் நிகழ்ச்சிகள், விருதுகள்   வென்ற அமேஸான் ஒரிஜினல் நிகழ்ச்சிகள்-என பல்வேறு தரப்பட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் விளம்பரங்கள் இல்லாமலும் உலகத் தரத்திலான காட்சி அனுபவத்துடனும்  அமேஸான் பிரைம் வீடியோவில் கிடைக்கிறது.

இந்தப் புதிய அனுபவத்தை நீங்கள் பெறுவதற்கு www.PrimeVideo.com  அல்லது  அமேஸான்  பிரைம் வீடியோ ஆப்பை இன்றே டவுன்லோடு  செய்யவும்.  பிரைம்  மெம்பர்ஷிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.999 அல்லது பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் இணையவும்.

Latest Posts

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா!

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி...

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர்தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என...

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது...

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800...

Don't Miss

திரையரங்குகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள்!

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா...

புத்தம் புதுக் காலை – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=AkqwSYwtbTI&feature=youtu.be

அமலா 30 வருஷங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறாஹ!

கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா மீண்டும் செயல்படத் துவங்கி யிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்...

நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் விமல்!

விமலின் நடிப்பில் தயாராகி வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து',  இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில்...

காந்தக் கண்ணழகி ‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை- படமாகிறது!

1980-களிலும், 1990-களிலும் தென்னிந்திய திரைப்பட துறையில்… இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், நடிகர்களாலும் தவிர்க்க முடியாத  கவர்ச்சி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. அவருக்கு முன்னால்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.